5 பேர் உள்ளே போனாலும் இன்னொருவருக்கு இடம் அளிக்கும் காரின் விற்பனை சரிவு! மாருதி சுஸுகிக்கு வேலை வந்துடுச்சு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், ஃபிரான்க்ஸ் (Fronx) ஆகும். மார்க்கெட்டில் ஏற்கனவே பிரபலமாக இருந்த மாருதி சுஸுகி பலேனோ (Baleno) என்கிற ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரின் கிராஸ்ஓவர் (Crossover) வெர்சனாக ஃபிரான்க்ஸ் கடந்த 2023ஆம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

2023 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் கைகளில் அதன்பின் அதே ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து கிடைக்க துவங்கியது. பலேனோ ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்ததால் எஸ்யூவி (SUV) ரக கார் பிரியர்களை ஈர்க்கும் விதமாக மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்த மாருதி சுஸுகி கிராஸ்ஓவர் காரின் விற்பனை ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது.

maruti suzuki fronx

இப்போதும் அவ்வாறுதான் உள்ளது என்றாலும், சற்று குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் 10வது இடத்திற்கு ஃபிரான்க்ஸ் சரிந்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக மற்ற அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி ஃபிரான்க்ஸ் முதலிடம் பிடித்து இருந்தது.

2025 பிப்ரவரியில் சுமார் 21 ஆயிரத்து 461 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 898 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்க்கும்போது, இந்த மாருதி சுஸுகி காரின் விற்பனை ஆனது 35% குறைந்துள்ளது.

maruti suzuki fronx

கடந்த 2026 ஜனவரி மாதத்திலும் 13 ஆயிரத்து 353 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 545 ஃபிரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதே என்று வேண்டுமாயின் மாருதி சுஸுகி சந்தோஷப்பட்டு கொள்ளலாம். 2025 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட 15,192 யூனிட்கள் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் 1,831 ஃபிரான்க்ஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டு கடைசி டிசம்பர் மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இதற்காக ஃபிரான்க்ஸ் காரின் தரத்தை நாம் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது.

மாருதி சுஸுகி கார்கள் வரிசையில் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா (Brezza) எஸ்யூவி கார்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஃபிரான்க்ஸ் மாருதி சுஸுகியின் காஸ்ட்லீயான கார்கள் விற்பனை செய்யப்படும் நெக்ஸா (NEXA) டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.6.85 லட்சத்தில் இருந்து ரூ.11.98 லட்சம் வரை தற்சமயம் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) உள்ளன.

இந்த காரில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல்-ஜெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் என இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜினில் எது ஒன்றையும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். டர்போ என்ஜின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் தரமான விலை குறைவான தயாரிப்புகளில் ஃபிரான்க்ஸ் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. தற்போது வேண்டுமாயின் இதன் விற்பனை சற்று குறைந்திருக்கலாம். ஆனால் விரைவில் மீண்டும் அதிகமாகும். மாருதி சுஸுகி நிறுவனம் ஏதேனும் அப்டேட்களை வழங்கினால் விற்பனை விரைவாகவே அதிகரிக்க துவங்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 8, 2026, 9:08 [IST]
English summary
Maruti suzuki fronx car sales down to 13898 in february 2026 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+