மாருதி பிரெஸ்ஸாவை விட குறைவான விலையில் ஃபோக்ஸ்வேகன் கார்! மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போட போறாங்க!

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே மிகவும் விலை குறைவானது என்ற பெருமை கைலக் (Skoda Kylaq) காருக்கு உண்டு. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

கைலக் காரின் வருகைக்கு பின்னர், இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே ஸ்கோடா நிறுவனத்தின் பாணியில், ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனமும், மிகவும் குறைவான விலையில், சப்- 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Skoda Kylaq Side Design

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்தான், ஸ்கோடா நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்கோடா கைலக் காரின் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மற்றும் வசதிகள் (Features) அப்படியே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன்படி பார்த்தால், ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்லைன் 4 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், அப்படியே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Skoda Kylaq

இதனுடன் கூடுதலாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் வசதிகளை பொறுத்தவரையில், ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்பட்டுள்ள வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்கள் எல்லாம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படலாம்.

அத்துடன் கூல்டு க்ளவ் பாஸ், சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம்.

அத்துடன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளையும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் வரும் 2027ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், இதுதான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான காராக இருக்கும்.

அத்துடன் இந்த விலையில் வந்தால், இது அதன் மிக முக்கியமான போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை (Maruti Suzuki Brezza) விட, விலை குறைவானதாக இருக்கும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை 8.26 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த செய்தியில் நாங்கள் தெரிவித்துள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 23:36 [IST]
English summary
Volkswagen sub 4m compact suv india launch in 2027 expected price features engine options
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+