மேம்படுத்தப்பட்ட சுஸுகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம்!!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்விஃப்ட் கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய மாற்றங்களுடன், கூடுதல் வசதிகளுடன் புதிய ஸ்விஃப்ட் வந்திருக்கிறது.
எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேவேளை, கூடுதல் மைலேஜ் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் மாருதி பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் குறித்த கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

ரன்னிங் விளக்குகள்
ஹூண்டாய் ஐ20 காரை போன்று பனி விளக்குகள் அறையில் பூமராங் வடிவத்திலான பகல் நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் வரும் வாகனங்களுக்கு பிரேக் பிடிப்பது தெளிவாக தெரியும் வகையிலான கூரை இறக்கத்தில் ஸ்டாப் லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியண்ட்டுகளில் புதிய வீல் கேப்புகளுடன் வந்துள்ளது.

புதிய வண்ணம்
மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரில் நீல வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதி
எஞ்சினை அணைக்கும்போது எலக்ட்ரிக் ரியர் வியூ கண்ணாடிகள் தானாகவே மடங்கி காருடன் ஒன்றிக் கொள்ளும் வசதியுடன் வந்துள்ளது.

இன்டிரியர்
டேஷ்போர்டில் கை வைக்கவில்லை சுஸுகி. அதேவேளை, புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

ஒன் டச் சுவிட்ச்
டிரைவருக்கு அருகில் இருக்கும் பவர் விண்டோஸ் ஒன் டச் எனப்படும் ஒரு தொடுதலில் இயங்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஹெட்லைட்
வெளிச்சத்துக்கு தகுந்தவாறு தானாகவே ஒளிரும் தானியங்கி ஹெட்லைட்டுகளுடன் வந்துள்ளது.

அதிக மைலேஜ்
1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினும், ஃபியட்டிடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினையும் ட்யூனிங் செய்துள்ளது சுஸுகி. இதன்மூலம், குறைந்த கார்பன் புகையுடன், அதிக மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.63 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும்...?
மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அடுத்த ஆண்டு வரும் இந்தியா வரும் மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெஷல் எடிசன்
30 ஜாரே என்ற பெயரில் ஜெர்மனியில் ஸ்பெஷல் எடிசன் ஸ்விஃப்ட் காரும், மேம்படுத்தப்பட்ட மாடலுடன் விற்பனைக்கு செல்ல உள்ளது. கான்ட்ராஸ்ட் கூரை, ஸ்பெஷல் பேட்ஜ் போன்றவற்றுடன் இந்த கார் விற்பனைக்கு செல்கிறது.


Click it and Unblock the Notifications








