ரூ.19.99 லட்சம் விலையில் புதிய பார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம்
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய பார்ச்சூனர், லேண்ட் குரூஸர் பிரிமியம் எஸ்யூவிக்கள் மற்றும் புதிய இன்னோவாவை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டோ பார்ச்சூனர் முடிசூடா மன்னனாக வலம் வருகிறது. இதை தக்கவைக்கும் விதமாக மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய பார்ச்சூனரை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.
2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் புதிய பார்ச்சூனர் வந்துள்ளது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று, இரண்டு மாடல்களிலும் 3.0 லி்ட்டர் டி-4டி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஆட்டோமேட்டிக் ஹேட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் மிரர்கள், ரியர் வியூ கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் புதுப்பொலிவுடன் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்ட 2 டின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இருக்கிறது.
புதிய பார்ச்சூனர் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
2 வீல் டிரைவ் எம்டி :ரூ.19.99 லட்சம்
2 வீல் டிரைவ் ஏடி :ரூ.20.69 லட்சம்
4 வீல் டிரைவ் எம்டி :ரூ.20.99 லட்சம்
அடுத்த பக்கத்தில் புதிய இன்னோவா கூடுதல் அம்சங்கள் மற்றும் விலை விபரம்


Click it and Unblock the Notifications








