மேம்படுத்தப்பட்ட இன்னோவாவை அறிமுகப்படுத்தியது டொயோட்டோ
ரூ.9.40 லட்சம் ஆரம்ப விலையில் புதிய இன்னோவா எம்பிவியை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.

புதுப்பொலிவு கொடுக்கும் முன்பக்க கிரில்கள், பக்கவாட்டில் நீண்டிருக்கும் புதிய ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், அலாய் வீல்கள் என வெளிப்புறம் கூடுதல் கவர்ச்சியை காட்டுகிறது புதிய இன்னோவா.
உட்புறம் முன்பைவிட அதிக சொகுசு கொண்டதாக இருக்கிறது புதிய இன்னோவா. லெதர் கவருடன் கூடிய ஸ்டீயரிங் வீல், டியூவல் டோன் சீட் கவர்கள், டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் ஸ்விட்சுகள் ஆகியவை புதிய இன்னோவாவின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.
புதிய இன்னோவா ரூ.9.40 லட்சம் முதல் ரூ.13.19 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, புதிய லேண்ட் குரூஸர் எஸ்யூவி மற்றும் புதிய கேம்ரி பிரிமியம் செடான் கார்களையும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டொயோட்டோ பார்வைக்கு வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








