சிறந்த 125சிசி ஸ்கூட்டர் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த 125 ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே காணலாம். சிறந்த 125சிசி ஸ்கூட்டர்களின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

 • 1 . சுஸூகி அக்செஸ் 125

  New சுஸூகி அக்செஸ் 125
  Scooters | 124 CC
  77,376 Onwards
  இந்தியாவின் 125 சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக சுஸுகி அக்செஸ் 125 தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. சந்தையில் மிக நீண்ட காலமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், டிசைன், தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களுடன் சந்தையில் ஸ்திரமாக இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பாரம்பரிய டிசைன் அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கிறது.
 • 2 . ஹோண்டா ஆக்டிவா 125

  New ஹோண்டா ஆக்டிவா 125
  Scooters | 124 CC
  78,395 Onwards
  ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அதிக மதிப்பை வழங்கும் தேர்வாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இருந்து வருகிறது. எல்லோரையும் கவரும் டிசைன், சிறந்த எஞ்சினுடன் இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 124.9சிசி எஞ்சின் பொருத்தப்ப்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டர் லிட்டரு்ககு 60 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 • 3 . டிவிஎஸ் என்டார்க் 125

  New டிவிஎஸ் என்டார்க் 125
  Scooters | 124.8 CC
  85,427 Onwards
  இளம் தலைமுறையினரை கவரும் வகையில் மிகவும் சிறப்பான டிசைன், தொழில்நுட்ப அம்சங்களுடன் டிவிஎஸ் என்டார்க 125 நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்த முதல் மாடலாகவும் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 124.79சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.2 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், எல்இடி ஹெட்லைட், புளூடூத் இணைப்பு வசதி, ஜபிஎஸ் நேவிகேஷன் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • 4 . ஹோண்டா கிரேஸியா

  New ஹோண்டா கிரேஸியா
  Scooters | 124 CC
  82,397 Onwards
  இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அசத்தலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வில் ஹோண்டா க்ரேஸியா வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரி்ல 124.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹோண்டா பிராண்டு மீதான நம்பிக்கையுடன் சிறந்த மதிப்பை வழங்கும் மாடலாக வரவேற்பை பெற்றிருக்கிறது.
 • 5 . ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

  New ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125
  Scooters | 124.6 CC
  82,758 Onwards
  நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த 125சிசி மாடலாக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பமும் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது.
 • 6 . ஏப்ரிலியா எஸ்ஆர் 125

  New ஏப்ரிலியா எஸ்ஆர் 125
  Scooters | 124.45 CC
  1,22,451 Onwards
  இளம் தலைமுறையினரை கவரும் மிகவும் துள்ளலான டிசைன் அம்சங்களுடன் கூடிய ஸ்கூட்டர் மாடலாக ஏப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 115 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
 • 7 . யமஹா Fascino 125

  New யமஹா Fascino 125
  Scooters | 125 CC
  79,456 Onwards
  யமஹா ஃபஸினோ 125 ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு டிசைன், தொழில்நுட்பங்களில் அவ்வப்போது மாற்றம் கண்டு வருகிறது. தற்போது இந்த ஸ்கூட்டர் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் வசதியுடன் உடனடி செயல்திறனை பெறும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சத்துடன் கிடைக்கிறது.
 • 8 . டிவிஎஸ் Jupiter 125

  New டிவிஎஸ் Jupiter 125
  Scooters | 124.8 CC
  84,568 Onwards
 • 9 . சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

  New சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்
  Scooters | 124 CC
  89,434 Onwards
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city