இந்தியாவின் சிறந்த மைலேஜ் ஸ்கூட்டர்களின் விபரம்

நகரப்புறங்களில் எளிதாக செல்வதற்கு ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் வரப்பிரசாதமாக மாறியுள்ளன. சிக்னல்களிலிருந்தும், வாகன நெரிசல்களிலும் எளிதாக செல்வதற்கு ஏதுவாக இருப்பதும், பொருட்கள் வைப்பதற்கு பாதுகாப்பான இடவசதி இருப்பதும் ஸ்கூட்டர்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேவேளை, ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுபவர்களுக்கு அதன் மைலேஜ்தான் பின்வாங்க செய்து விடுகிறது. இந்த நிலையில், விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஸ்கூட்டர்களின் சோதனை நிலை மைலேஜ் விபரத்துடன், நடைமுறையில் அவை வழங்கும் மைலேஜ் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிவிஎஸ் வீகோ

டிவிஎஸ் வீகோ

லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த ஸ்கூட்டர் சராசரியாக 45 கிமீ மைலேஜ் தரும்.

8 பிஎச்பி ஆற்றலையும், 8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109.7 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் ரூ.60,100 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுஸுகி சுவிஷ்

சுஸுகி சுவிஷ்

சுஸுகி சுவிஷ் ஸ்கூட்டர் லிட்டருக்கு 57 கிமீ தரும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் சராசரியாக 44 கிமீ மைலேஜ் தரும்.

8.58 பிஎச்பி ஆற்றலையும், 9.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் ரூ.66,895 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா டியூரோ

மஹிந்திரா டியூரோ

மஹிந்திரா டியூரோ லிட்டருக்கு 56 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 46 கிமீ மைலேஜ் தரும்.

இந்த ஸ்கூட்டரில் 10.87 எச்பி ஆற்றலையும், 9.0 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124.6 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் ரூ.54,480 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா

ஆக்டிவா, டியோ, ஏவியேட்டர் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களுமே லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாக ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் தரும்.

8 பிஎச்பி ஆற்றலையும், 8.74 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.57,355 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தரும்.

8 எச்பி ஆற்றலையும், 9.10 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் ரூ.56,145 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 டிவிஎஸ் ஜூபிடர்

டிவிஎஸ் ஜூபிடர்

மார்க்கெட்டுக்கு சமீபத்தில் வந்திருக்கும் டிவிஎஸ் ஜூபிடர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இன்னும் விற்பனைக்கு வராதபட்சத்தில் சராசரியாக லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைலேஜ் விபரங்கள் ஓட்டுதல் முறையை பொறுத்து வேறுபடலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2013, 11:09 [IST]
English summary
The most common criteria for zeroing down to a model is fuel economy. In this post we have listed the top 5 scooters based on manufacturer claimed mileage figures along with average on-road fuel economy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+