சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்
Style: எஸ்யூவி
37.67 - 37.67 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் 1 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
37,67,000

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 17.5

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் விமர்சனம்

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் அந்தஸ்து கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி தோற்றத்தில் மிகச்சிறப்பாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டடங்களுடன் இந்த எஸ்யூவி சிறப்பானதாக இருக்கிறது. பின்புறத்திலும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங்குகள், க்ரோம் பூச்சு கொண்ட புகைப்போக்கி குழல்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. மொத்தத்தில் தனித்துவமான அழகுடன் வசீகரிக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 5 விதமான டிரைவிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் மைலேஜ்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் இருக்கும் சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் வழங்கும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. நடைமுறையில் 12 முதல் 14 கிமீ மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் முக்கிய அம்சங்கள்

உட்புறத்தில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணக் கலவையிலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. பனோரமிக் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்டுகள், மல்டிப்பிள் ஸ்டோரேஜ் வசதிகளும் உள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பனி விளக்குகள், கார்னரிங் விளக்குகள், பார்க் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் தீர்ப்பு


சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரின் மேஜிக் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் மிகச் சிறந்த சொகுசு பயணத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்த கார் சில ஆரம்ப விலை கொண்ட சொகுசு கார்களுக்கு இணையானதாக தெரிவிக்கப்படுகிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக விலை கொண்ட 5 சீட்டர் மாடலாக நிலைநிறுத்தப்பட்டாலும், சொகுசு மற்றும் தனித்துவமான தோற்றம் மூலமாக தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்க முனைந்து வருகிறது.

வண்ணங்கள்


Eclipse Blue
Eclipse Blue with Black Roof
Pearl Nera Black
Cumulus Grey
Cumulus Grey with Black Roof
Pearl White
Pearl White with black Roof

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X