விற்பனையில் டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளிய ஹோண்டா

மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோ கார்ப் முதலிடத்திலும், பஜாஜ் ஆட்டோ இரண்டாவது இடத்திலும், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் 3 இடத்திலும் இருந்து வந்தன.
இந்த நிலையில், கடந்த மாத மோட்டார்சைக்கிள் விற்பனையில் நான்காவது இடத்தில் இருந்த ஹோண்டா நிறுவனம் விற்பனையில் டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த மாதம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1,89,454 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம் 1,50,406 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்து மார்க்கெட்டில் ஒரு இடத்தை பறிகொடுத்தது.


Click it and Unblock the Notifications








