மாருதி குட்டி ஸ்விப்ட டிசையர்- சிறப்பு பார்வை-1

நம் நாட்டு செடான் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை ஸ்விப்ட் டிசையர் பெற்றுள்ளது. ஸ்விப்ட் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட டிசையர் அதிக இடவசதி, சொகுசு, குறைந்த விலை போன்ற காரணங்களால் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்ற மாடலாக விளங்குகிறது.
இந்த நிலையில், வரிச்சலுகை பெறும் விதத்திலும், நகர்ப்புறங்களில் எளிதாக கையாளுமை கொண்ட காராகவும் இருக்கும் விதத்தில் ஸ்விப்ட் டிசையர் காரை மாருதி தற்போது மறு வடிவமைப்பு செய்துள்ளது. வரும் 1ந் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஸ்விப்ட் பழைய மாடலைவிட பார்த்தவுடன் சிக்கென்று இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும், ஆவலைத்தூண்டியுள்ளது.
வெளிப்புற வடிவமைப்பு:
புதிய டிசையரின் முன்பக்கம் வடிவமைப்பு கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட்டை போல அச்சு அசலாக இருக்கிறது. ஆனால், பின்பக்கம் பார்த்தால் சத்தியம் அடித்து கூறினாலும், டிசையர் கார் என்பதை நம்ப முடியாத அளவிற்கு வெகு நேர்த்தியாக மாற்றியுள்ளது மாருதி. முந்தைய மாடலைவிட 165 மிமீ நீளத்தை டிசையரில் கத்தரி போட்டு புதிய மாடலை வடிவமைத்துள்ளது மாருதி.
புதிய ஸ்விப்ட் டிசையர் 3995 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், பொருட்கள் வைப்பதற்கான இடம் வெகுவாக குறைந்துவிட்டது. செடான் என்றோ அல்லது ஹேட்ச்பேக் கார் என்று கூற முடியாத அளவிற்கு நாட்ச்பேக் ரகத்தை சேர்ந்த காராக ஸ்விப்ட் டிசையர் மாறியிருக்கிறது. முன்பக்கம் பெரிய ஏர்டேம், பெரிய வளையத்திற்குள் பனி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது. பின் இருக்கைக்கான கதவுகள் சற்று பெரிதாக இருப்பதால் ஏறி இறங்குவதற்கு மிக வசதியாக இருக்கும்.
உட்புற வடிவமைப்பு:
உட்புற வடிவமைப்பை பொறுத்தவரை புதிய ஸ்விப்ட் டேஷ் போர்டை ஒத்திருக்கிறது புதிய டிசையர். டோர் பேடுகள், டேஷ்போர்டின் கீழ் பக்கம் பியேஜ் பிளாஸ்டிக்கால் இழைக்கப்பட்டிருக்கிறது. அருவி வடிவ சென்ட்ரல் கன்சோல், புத்தம் புதிய ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்டகிரேடட் ஆடியோ சிஸ்டம் ஆகியவை புதிய டிசையரின் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான விஷயங்கள்.
முன் வரிசை இருக்கைகளும் சொகுசாகவும், வசதியாகவும் இருக்கிறது. இதுவும் ஸ்விப்ட் உபயம்தான். புதிய டிசையரின் வீல் பேஸ் 40 மிமீ அதிக நீளம் கொண்டதாக இருப்பதால் பின் வரிசை இருக்கையில் அமர்பவர்கள் மிக தாராளமான இடவசதியை உணர முடிகிறது. பின் இருக்கையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்ட ஹெட்ரெஸ்ட் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை கூடுதல் சொகுசை தருகிறது.
(அடுத்த பக்கத்தில் டிசையர் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ், விலை விபரங்கள்)


Click it and Unblock the Notifications








