மாருதி குட்டி ஸ்விப்ட டிசையர்- சிறப்பு பார்வை-2

By -சரவணராஜன்
Dzire Interiors

எஞ்சின்:

புதிய டிசையர் 1.2 லிட்டர் கே-12 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. இதில், பெட்ரோல் மாடல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது.

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட பெட்ரோல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 87 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை கவனத்தில்க்கொண்டு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலையும் மாருதி அறிமுகப்படுத்துகிறது. ஆனால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் த்ரில் விரும்பும் வாடிக்கையாளர்களை எந்தளவு திருப்திப்படுத்தும் என்பது தெரியவில்லை.

அடுத்து டீசல் மாடல் 4,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல்வேகத்தில் 75 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சினைவிட டீசல் எஞ்சின் கேபினுக்குள் சற்று கூடுதல் அதிர்வுகளை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. மேலும், டாப் என்ட் வேகத்தில் செல்லும்போது இரண்டு எஞ்சின்களும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

மைலேஜ்:

பழைய டிசையரைவிட புதிய டிசையர் எடையும் குறைந்திருப்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ (முந்தைய மாடலைவிட 6.7 சதவீதம் அதிகம்) மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.4 கிமீ மைலேஜ்(முந்தைய மாடலைவிட 21.4 கிமீ) கொடுப்பதாகவும் மாருதி கூறியுள்ளது.

விலை விபரம்:

பெட்ரோல் மாடல் புதிய டிசையர் ரூ.4.94 லட்சம் முதல் ரூ.6.4 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் புதிய டிசையர் ரூ.5.95 லட்சம் முதல் ரூ.7.30 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

Most Read Articles
English summary
The current Swift DZire has been appreciated by many for its peppy performance, space and comfort but the car has not been able to impress everyone with its looks. The fact that a sporty looking hatchback was stretched and a boot was added to its rear makes the car look awkward. But the DZire conquered its buyers with its sheer practicality. Here is a car that can drive like a hatchback, has the fuel economy of a hatchback but has the space and luggage space of a sedan. You can tick all the the positives in the new Swift DZire and many more as Maruti Suzuki has added several new features to the car.
Story first published: Friday, January 20, 2012, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X