மாருதி எர்டிகா விலையில் 9 சீட்டர் கார்... உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்திய நிறுவனம்...

இந்தியாவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் அதிக இருக்கைகளை கொண்ட கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) போன்ற கார்கள், இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய கார்களில் 7 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் இதை விட அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்க வேண்டும் எனவும் நீங்கள் விரும்பினால், உங்களுக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

Mahindra Scorpio Classic

கடந்த 2002ம் ஆண்டில் இருந்து, மஹிந்திரா ஸ்கார்பியோ கார், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என மொத்தம் 2 வெர்ஷன்களில், மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையாகி கொண்டுள்ளது.

இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் (Seating Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.

Mahindra Scorpio N

அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் (Gear Box Options) கொடுக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற அதிநவீன வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை (கிளாசிக் + என்) ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 14,665 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 13,618 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 1,047 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் 7.69 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறந்து வருவதற்கு அதிக இருக்கைகள், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவற்றுடன் சரியான விலை நிர்ணயமும் காரணம் ஆகும்.

தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலையில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும்.

அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 13.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.34 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அறிமுகம் செய்யப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் கூட, தற்போதும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ கார், இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த காவல் துறையினரும், பாதுகாப்பு பணிகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ காரை ஈடுபடுத்தி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2026, 15:38 [IST]
English summary
Mahindra scorpio classic n sales report february 2026 8 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+