மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை விட 3 லட்சம் குறைவான விலையில் மாருதி தயாரிப்பு! டாடா கதையும் முடிஞ்சுது!
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு சுமார் 2.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து கொண்டுள்ளது. இதில் சுமார் 1.80 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
எஞ்சிய 50 ஆயிரம் கார்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு தொடர்ந்து நல்ல 'டிமாண்ட்' இருந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை முன்பதிவு (Bookings) செய்து விட்டு, டெலிவரிக்காக (Delivery) காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி ஹரியானா மாநிலம் கார்கோடா மற்றும் குஜராத் மாநிலம் ஹன்சல்பூர் பகுதிகளில் உள்ள தனது ஆலைகளில் புதிய 'அசெம்ப்ளி லைன்' திறப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த 2 அசெம்ப்ளி லைன்களும் வரும் 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது வரும் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 அசெம்பிளி லைன்களிலும் ஒவ்வொரு மாதமும் தலா 20 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், வெகு சமீபத்தில்தான் அதன் முதல் எலெக்ட்ரிக் காரை (Electric Car), இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலெக்ட்ரிக் கார், இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டி மாடல்கள் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) எலெக்ட்ரிக் கார் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலை 2.91 லட்சம் குறைவு. மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.90 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலெக்ட்ரிக் கார் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலை 1.50 லட்ச ரூபாய் குறைவு. டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.49 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.
இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், உற்பத்தியை அதிகரிப்பது என அந்த நிறுவனம் எடுத்துள்ள முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் காரணமாக கார்களின் டெலிவரிக்காக வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருக்கும் காலம் (Waiting Period) குறையும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








