பாதி விலைக்கு கார் கொடுத்தா கூட மற்ற பிராண்ட்களில் இந்த அளவுக்கு விற்பனை ஆகுமானு தெரியாது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,13,995 யூனிட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 2025 பிப்ரவரியில் விற்பனையான 1,99,400 மாருதி கார்களை விடக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதேசமயம் உள்நாட்டு மாருதி கார்கள் விற்பனையிலும் பெரிய மாற்றம் இல்லை.

மாருதி சுஸுகியின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2026 பிப்ரவரியில் 1,60,791 யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2025ஆம் ஆண்டின் இதே பிப்ரவரி மாதத்தில் இது 1,60,272 யூனிட்டுகளாக இருந்தது. இது 519 யூனிட்டுகள் அல்லது 0.32 சதவீதம் என்கிற மிகக் குறைந்த வளர்ச்சியைக் காட்டுகிறது. மாருதி சுஸுகியின் இலகுரக கமர்ஷியல் வாகனங்கள் (LCV) மற்றும் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டவை எல்லாம் சேர்த்தால், இந்த நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 1,74,840 யூனிட்டுகள் ஆகும்.

maruti suzuki car sales

இது கடந்த ஆண்டின் 1,74,379 யூனிட்டுகளில் இருந்து சற்று அதிகரித்துள்ளது. 2026 பிப்ரவரியில் மாருதி நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு 10,710 யூனிட் கார்களை வழங்கியுள்ளது. இது 2025 பிப்ரவரியில் வழங்கப்பட்ட 10,878 யூனிட்டுகளை விட 168 அலகுகள் (1.54 சதவீதம்) குறைவு. இருப்பினும், மாருதி சுஸுகியின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

2026 பிப்ரவரியில் 39,155 மாருதி சுஸுகி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2025 பிப்ரவரியில் பதிவான 25,021 கார்கள் ஏற்றுமதி உடன் ஒப்பிடுகையில் 14,134 யூனிட்டுகள் அல்லது 56.5 சதவீதம் அதிகரிப்பாகும். கார்கள் பிரிவு வாரியாக உள்நாட்டு விற்பனையைப் பார்க்கும்போது, ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட மினி மற்றும் காம்பாக்ட் கார்கள் பிரிவுகளில் 76,624 யூனிட்டுகள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

maruti suzuki car sales

இது 2025 பிப்ரவரியில் பதிவான 83,168 யூனிட்டுகளை விட 6,544 யூனிட்டுகள் (7.87 சதவீதம்) குறைவாகும். மறுபுறம், பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி, இன்விக்டோ மற்றும் எக்ஸ்.எல்6 ஆகிய பயன்பாட்டு வாகனப் பிரிவு (Utility Vehicles) வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த பிரிவில் 2026 பிப்ரவரியில் 72,756 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

இது 2025 பிப்ரவரியில் 65,033 யூனிட்டுகளாக இருந்தது, இந்த வகையில் பார்க்கும்போது இது 7,723 யூனிட்டுகள் (11.87 சதவீதம்) வளர்ச்சி ஆகும். ஈக்கோ (Eeco) விற்பனை 11,620 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஏனெனில், 2025 பிப்ரவரியில் இது 10,493 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது, இது 1,127 யூனிட்டுகள் அல்லது 10.74 சதவீதம் அதிகரிப்பை குறிக்கிறது.

சுஸுகி சூப்பர் கேரி என்கிற இலகுரக கமர்ஷியல் வாகனம் கடந்த மாதம் 3,130 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு பிப்ரவரியில் 2,710 யூனிட்டுகளாக இருந்தது. இது 420 யூனிட்டுகள் (15.49 சதவீதம்) உயர்வைக் காட்டுகிறது. 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை 21,97,462 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தின் 20,41,282 யூனிட்டுகளை விட அதிகம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த பிப்ரவரி மாதம் மட்டுமின்றி, கடந்த ஒரு வருடமாகவே மாருதி சுஸுகியின் ஏற்றுமதி கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேசமயம் உள்நாட்டு வளர்ச்சி மிதமாகவே இருந்துள்ளது. இது உலகளவில் மாருதி சுஸுகி கார்களுக்கு அதிகரித்துவரும் தேவையையும், அதேநேரம் சமீப காலமாக உள்நாட்டு சந்தையில் மஹிந்திரா (Mahindra), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற நிறுவனங்களின் கார்களும் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்து வருவதையும் காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 10:34 [IST]
English summary
Maruti suzuki sold 213995 cars in february 2026 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+