எஞ்சின், பெர்ஃபார்மென்ஸ், பாதுகாப்பு வசதிகள்: ஒப்பீடு

பெர்ஃபார்மென்சில் சன்னியை பின்னுக்குத் தள்ளி ரேபிட் சபாஷ் பெறுகிறது. வோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ரேபிட்டிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி ஆற்றலையும், 250என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஆனால், சன்னியில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 80 பிஎச்பி ஆற்றலையும், 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் மட்டுமே வெளிப்படு்த்தும் திறன் கொண்டது.
கையாளுமை:
சன்னியை ஒப்பிடும்போது ரேபிட்டின் ஸ்டீயரிங் வீல் சொன்ன சொல்படி கேட்பதுடன், கைக்கு லாவகமாகவும் இருக்கிறது. ஆனால், இரண்டு கார்களும் அதிவேகத்தில் செல்லும்போது அதிக நிலைத்தன்மையுடன் ஒரே மாதிரியான அனுபவத்தை தருவதை மறுக்க இயலாது.
இதில், ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வழித்தடம் (லைன் சேஞ்சிங்)மாறும்போது சன்னி வெகு வேகமாக மாறுகிறது. ஆனால், கையாளுமை மற்றும் பெர்ஃபார்மென்சில் சுருதி சுத்தமாக ரேபிட் பெஸ்ட் என்று ஆணித்தரமாக கூறலாம்.
பாதுகாப்பு மற்றும் வசதிகள்:
இரண்டிலும் பொதுவான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஏசி, ரியர் ஏசி வென்ட்டுகள், ஹீட்டர், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீக்கருடன் மியூசிக் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஹெட்ரெஸ்ட் ஆகியவை பொதுவான அம்சங்கள்.
பேஸ் மாடலை பொறுத்தவரை சன்னி கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல், ஏர்பேக், எலக்ட்ரிக் மிரர், இபிடி தொழில்நுட்பத்துடன் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டிருக்கிறது சன்னி. இதேபோன்று, டாப் வேரியண்ட்டிலும் ரேபிட்டை விட சன்னி கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








