ஸ்கோடா ரேபிட் vs நிசான் சன்னி: முழுமையான ஒப்பீடு

Nissan Sunny
இந்திய மார்க்கெட்டில் டீசல் கார் மாடல்களின் வரிசை நீண்டு கொண்டே போகிறது. இதில், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக மாறியுள்ளன.

கடந்த சில மாதங்களாக அந்த கார்களின் விற்பனையை பார்த்தாலே இந்த உண்மையை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இந்த நிலையில், இரண்டும் அதனதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அருமையான கார்களாக இருந்தாலும், நம் தேவைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற கார் எது என்பதை தேர்வு செய்ய இங்கே ஒரு ஒப்பீட்டு அலசலை காணலாம்.

வடிவமைப்பு:

ஸ்கோட ரேபிட் முழுக்க முழுக்க ஐரோப்பிய டிசைன் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வோக்வேகன் வென்ட்டோ கார் பிளாட்பார்மில்தான் ரேபிட் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஸ்கோடாவின் கைவண்ணம் அந்த எண்ணத்தை மாற்றி விடுகிறது.

மேலிருந்து கீழ் குறுக்காக ஸ்கோடாவின் அனைத்து கார்களுக்கும் பிரதானமான பிராண்டு முத்திரையுடன் முன்பக்க கிரில் பளிச்சிடுகிறது. இதற்கு நேர்மாறாக நிசான் சன்னியின் முன்பக்க கிரில் படுக்கைவாட்டில் இருக்கிறது. மேலும், இரண்டு கார்களையும் பக்கத்து பக்கத்தில் நிறுத்தி பார்த்தால் நிசான் சன்னி கார்ர்ர்...! என்று கூற தோன்றுகிறது.

அதேவேளை, ரேபிட் அழகு பதுமையாக, அடக்கமாக நிற்கும் மாணவனை போல் காட்சி தருகிறது. ஸ்டைலில் ஸ்கோடா ரேபிட்டுக்கு கூடுதல் மார்க் போடலாம்.

உட்புற இடவசதி:

ஸ்கோடா ரேபிட் 2552மிமீ வீல் பேசும், நிசான் சன்னி 2600மிமீ வீல் பேசும் கொண்டிருக்கின்றன. எனவே, சன்னியின் உட்புறத்தில் நுழைந்தவுடன் ஓர் விசாலமான உணர்வை தருகிறது. குறிப்பாக, பி்ன்னிருக்கை அதிக இடவசதி மற்றும் கால்களை வைக்க வசதியாக இருக்கிறது சன்னி. ஆனால், ரேபிட் உட்புறம் கச்சிதமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2012, 10:41 [IST]
English summary
The Skoda Rapid diesel and Nissan Sunny diesel are unlikely competitors. But both are priced similarly and Drivespark is comparing these to entry level sedans. While the Rapid has the looks, power and performance, the Sunny takes the lead when it comes to space, comfort and handling. The sunny takes the cake with regards to its features while the Rapid impressed us with its stately looks. Read on to see the final results of this car comparison.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+