ரூ.7.29 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்!
ரூ.7.29 லட்சம் ஆரம்ப விலையில் நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்திலும், இன்டிரியரிலும் மாற்றங்களுடன் வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மாடல்களில் வசதிகளுக்கு தக்கவாறு மொத்தம் 8 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வசதிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் முழுமையான விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
செய்தியின் தொடர்ச்சியை தொடர்ந்து ஸ்லைடரில் படிக்கலாம்.

வெளிப்புறத் தோற்றம்
புதிய பம்பர், ஹெட்லைட், முகப்பு கிரில் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு சன்னி கூடுதல் கவர்ச்சியாக தெரிகிறது. குரோம் பூச்சு கொண்ட டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 'Y; ஆங்கில எழுத்து வடிவிலான ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்டிரியர்
இன்டிரியரில் பியானோ பிளாக் வண்ண கன்சோல், புதிய 5.1 மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா டிஸ்ப்ளே, லெதர் அப்ஹோல்ஸ்டரி, புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளுடன் வருகிறது. 4 பயணிகளுக்கான ரீடிங் விளக்குகள் உள்ளன. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் உண்டு. கேபினுக்குள் வரும் அதிர்வுகள் மற்றும் இரைச்சல் அளவு குறைவாக இருக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 99 எச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலாகும். இதுதவிர, இதே எஞ்சினுடன் 101 எச்பி பவரை அளிக்கும் எக்ஸ் ட்ரோனிக் சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடலிலும் கிடைக்கும்.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 86 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

டீசல் மாடலின் மைலேஜ்
டீசல் மாடலில் எஞ்சின் இசியூ.,வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் சிறிது கூடுதல் மைலேஜ் தரும் வகையில் வருகிறது. முந்தைய மாடல் லிட்டருக்கு 21.64 கிமீ மைலேஜ் தருவதாக இருந்தது. புதிய மாடல் லிட்டருக்கு 22.71 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும்.

விலை விபரம்
பெட்ரோல்
எக்ஸ்இ - ரூ.7,29,354
எக்ஸ்எல் - ரூ.7,94,046
எக்ஸ்எல் சிவிடி- ரூ.9,29,692

விலை விபரம்
டீசல்
எக்ஸ்இ டீ - ரூ.8,33,696
எக்ஸ்எல் டீ - ரூ.8,97,345
எக்ஸ்வி டீ- ரூ.9,73,553
எக்ஸ்வி டீ- 10,02,248 (பிரிமியம்- சேஃப்டி)
எக்ஸ்வி டீ- ரூ.10,22,690 (பிரிமியம் - லெதர்)
(அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)

வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்
நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








