நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்களின் முழு விபரம்

மிட்சைஸ் மார்க்கெட்டில் சிறந்த இடவசதியுடைய காராகவும், பட்ஜெட் விலை மாடலாகவும் நிசான் சன்னி விளங்குகிறது. இந்த நிலையில், காம்பேக்ட் செடான் கார்களினால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து சன்னி காரில் கூடுதல் அம்சங்களை சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் அந்தமான் தீவுகளில் நிசான் சன்னி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு ஊடக விமர்சகர்களுக்கு வழங்கப்பட்டது. டிரைவ்ஸ்பார்க் தளத்தின் விமர்சகர் குழுவும் சன்னி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளனர். அந்த செய்தி விரைவில் வெளியிட உள்ளோம். இந்த நிலையில், நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம் மீடியாக்களில் வெளியாகியுள்ளன.


வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 8 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தவிர்த்து சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்எல் மற்றும் எக்ஸ்வி ஆகிய மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆனால், எக்ஸ்வி வேரியண்ட் டீசல் மாடலில் மட்டும் இரண்டு விதமான ஆக்செஸெரீஸ் பேக்குகளுடன் வருகிறது.

 பேஸ் வேரியண்ட் வசதிகள்

பேஸ் வேரியண்ட் வசதிகள்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டில் பாடி கலர் பம்பர்கள், கருப்பு நிற கதவு கைப்பிடிகள், டியூவல் டிரிப் மீட்டர், எரிபொருள் சிக்கனத்தை காட்டும் திரை, கப் ஹோல்டர்கள், டில்ட் ஸ்டீயரிங், முன்பக்க கதவுகளில் பவர் விண்டோ வசதி, டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட் வசதிகள் இருக்கும்.

மிட் வேரியண்ட் வசதிகள்

மிட் வேரியண்ட் வசதிகள்

மிட் வேரியண்ட்டில் முன்பக்கத்தில் குரோம் பினிஷ் கொண்ட கிரில் , வீல் கவர்கள், பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள், கருப்பு நிற பி பில்லர், ரியர் டிஃபாகர், புளூடூத், யுஎஸ்பி வசதியுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்பீடு சென்சிங் வால்யூம் கன்ட்ரோல் வசதி, 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் வசதி, சாம்பல் நிற உள்புறம், பின்பு கதவுகளிலும் பவர் விண்டோஸ், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார், டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட் வசதி, ஆண்டி தெஃப்ட் அலாரம், சீட் பெல்ட் இண்டிகேட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் கிடைக்கும். இதுவே பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட்டாக இருக்கும்.

டாப் வேரியண்ட் வசதிகள்

டாப் வேரியண்ட் வசதிகள்

நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எக்ஸ்வி என்ற டாப் வேரியண்ட் டீசல் மாடலில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. பனி விளக்குகள், அலாய் வீல்கள், குரோம் கைப்பிடிகள், இண்டிகேட்டர்களுடன் கூடிய எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ கண்ணாடிகள், திரையுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், வெளிப்புற வெப்பநிலையை காட்டும் திரை, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, ரியர் வியூ கேமரா, ரியர் ஏசி வென்ட், பின்புற இருக்கைக்கான ரீடிங் விளக்குகள், முன்புற பயணிக்கான ஏர்பேக் ஆகியவை பொதுவான எக்ஸ்வி வேரியண்ட் சிறப்பு வசதிகளாக இருக்கும். கூடுதல் வசதிகளுடன் இரு மாடலாக இவை கிடைக்கும். அதன் விபரத்தை அடுத்த ஸ்லைடரில் காணலாம்.

பிரிமியம் பேக்குகள்

பிரிமியம் பேக்குகள்

எக்ஸ்வி டாப் வேரியண்ட்டில் பிரிமியம் பேக் 1 மற்றும் பிரிமியம் பேக் 2 என்ற இரண்டு விதமான மாடலில் கிடைக்கும். முந்தைய ஸ்லைடில் கண்ட அனைத்து வசதிகளுடன் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரிமியம் பேக் 1 வேரியண்ட்டில் கூடுதலாக லெதர் அப்ஹோல்ஸ்டரி, லெதர் கவருடன் கூடிய கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். எக்ஸ்வி பிரிமியம் பேக் 2 மாடலில் சைடு ஏர்பேக்குகள் கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

புதிய நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சைஸ் செக்மென்ட்டில் சரியான விலையில் நிரம்ப வசதிகள் கொண்டதாகவும், சிறந்த எஞ்சின் சாய்ஸ்களுடன் விரைவில் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2014, 13:29 [IST]
English summary
Japanese carmaker Nissan is all set to launch its facelift version Sunny sedan in India. Company has revealed the variant details of the new Nissan Sunny. The new 2014 Sunny will be available in three variants - XE, XL and XV. The XV will be available only with a diesel engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+