மிக சவாலான விலையில் புதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு வந்தது
ரூ.22.95 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய ஆடி ஏ3 சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திருக்கும் இந்த புதிய கார் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறைவான விலை செடான் என்பதால் தோற்றத்தில் எந்தவித குறையும் இல்லாமல் மிகச்சிறப்பான டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்திய வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது. இந்த புதிய கார் மாடல் பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் என்ட்ரி லெவல் மாடல்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறலாம். இதற்கு தக்கவாறு எந்தவொரு ஆடி காருக்கும் இல்லாத வரவேற்பு இந்த காருக்கு இருப்பதாக டீலர்ஷிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், முன்பதிவு எண்ணிக்கையிலும் அசத்தும் என நம்பலாம்.
கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்
பெட்ரோல் எஞ்சின் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டிலும், வசதிகளை பொறுத்து டீசல் மாடலில் 4 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்
பெட்ரோல் மாடலில் 180 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. டீசல் மாடலில் 143 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

இந்தியாவில் அசெம்பிள்
விற்பனைக்கு வரும்போதே அசெம்பிளிங் செய்து வரும் முதல் ஆடி கார் இது. தற்போது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஆடியின் ஏ4, ஏ6, க்யூ3, க்யூ5 மற்றும் க்யூ7 ஆகிய மாடல்கள் அனைத்தும் முதலில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பின்னர்தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கின.

போட்டி இல்லை
ஆடி ஏ3 காருக்கு அதே ரகத்தில் தற்போது போட்டி மாடல் இல்லை. ஆனால், விலை அடிப்படையில் பென்ஸ் ஏ கிளாஸ், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஆகிய கார்கள் போட்டியாக இருக்கும். எனவே, இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என உறுதியாக கூறலாம்.

விலை விபரம்
டீசல்
ஏ3 அட்ராக்ஷன்: ரூ.22.95 லட்சம்
ஏ3 பிரிமியம்: ரூ.25.95 லட்சம்
ஏ3 பிரிமியம் ப்ளஸ்: ரூ.29.95 லட்சம்
ஏ3 டெக்னாலஜி: ரூ.32.66 லட்சம்
பெட்ரோல் மாடல்
ஏ3 பிரிமியம் ப்ளஸ்: ரூ.28.95 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
புதிய ஆடி ஏ3 காரின் டீசல் மாடலின் ஃப்ர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








