சென்னையில் வால்வோவின் வி40 கிராஸ் கன்ட்ரி விற்பனைக்கு வந்தது
சென்னையில் வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இருக்கும் வால்வோ கார் ஷோரூமில் நடந்த விழாவில் வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் காரை அறிமுகம் செய்து வைத்தார்.
ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய சொகுசு கார்தான் வால்வோ இந்தியா நிறுவனத்தின் தற்போதைய குறைந்த விலை கொண்ட மாடல். இந்த காரில் 150 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி காரின் சிறப்பம்சங்கள்

விழாவில் பேசிய வால்வோ நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் கூறுகையில்,"ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு சோதனையில் வி40 கிராஸ் கன்ட்ரி கார் 5 நட்சத்திர தர அந்தஸ்தை பெற்றுள்ளது. டிசைன், வசதிகள், தொழில்நுட்பம், பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் ஒரு முழுமையான சொகுசு காராக இந்த புதிய கார் இருக்கும்," என்றார்.
சென்னையில் இந்த புதிய கார் ரூ.29.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








