வால்வோவின் அழகு பதுமை அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்

ரூ.28.5 லட்சம் விலையில் வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி சொகுசு கிராஸ்ஓவர் ரக கார் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. பாதுகாப்பு, சொகுசு மற்றும் புதுமையான வசதிகளுடன் வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி விற்பனைக்கு வந்துள்ளது.

சர்வதேச மார்க்கெட்டில் இந்த கார் 4 பெட்ரோல் மாடல்களிலும், 3 டீசல் மாடல்களிலும் கிடைக்கும் நிலையில், இந்தியாவில் ஒரேயொரு டீசல் மாடலில் மட்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த காரில் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 148 எச்பி ஆற்றலையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பக்கா பாதுகாப்பு

பக்கா பாதுகாப்பு

வால்வோ கார்கள் பாதுகாப்பு வசதிகளுக்கு பெயர் பெற்றவை. இதனை நிரூபணம் செய்யும் வகையி், இந்த காரில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், முன்புற பயணிகளின் கால்களுக்கான ஏர்பேக்குகளும் அடங்கும்.

ஆட்டோமேட்டிக் பிரேக்

ஆட்டோமேட்டிக் பிரேக்

சிறப்பான நிலைத்தன்மையை கொடுக்கும் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் லேசர் உதவியுடன் செயல்படும் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

சன்ரூஃப்

சன்ரூஃப்

பனரோமிக் கண்ணாடி கூரை, ஏர் பில்டர் கொண்ட ஏசி, குரூஸ் கன்ட்ரோல், 7 விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட தியேட்டர் லைட்ஸ் ஆகியவை உள்ளன.

அம்சங்கள்

அம்சங்கள்

இருக்கை அமைப்பை பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதி மற்றும் வெதுவெதுப்பை தரும் வசதி கொண்ட லெதர் இருக்கைகள், கீ லெஸ் என்ட்ரி, எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், வால்வோ சென்சஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இருக்கின்றன.

ஸ்டார்ட்/ஸ்டாப்

ஸ்டார்ட்/ஸ்டாப்

எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல ஸ்டார்ட் ஸ்டாப் மற்றும் பிரேக் ஆற்றலை சேமித்து எஞ்சினுக்கு தரும் தொழில்நுட்பங்களும் உண்டு.

 அடாப்டிவ் டிஜிட்டல் டிஸ்ப்ளே

அடாப்டிவ் டிஜிட்டல் டிஸ்ப்ளே

8 இஞ்ச் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், எலிகன்ஸ், ஈக்கோ மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய மூன்றுவிதமான டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ஸ்பீடோமீட்டர் மற்றும் கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் ஆகியவை இருக்கின்றன.

அவசர கால தொழில்நுட்பம்

அவசர கால தொழில்நுட்பம்

இந்த காரில் பிரேக்கை அவசரமாக பிடிக்கும்போது, ஆக்சிலேட்டரை முழுவதுமாக நிறுத்திவிடும் வசதி இருக்கிறது.

 ஆட்டோமேட்டிக் பார்க்கிங்

ஆட்டோமேட்டிக் பார்க்கிங்

இந்த காரில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி உள்ளது. காரின் நீளத்தை விட 1.2 மடங்கு அதிக இடவசதி உள்ள இடத்தில் இந்த கார் தானாகவே பார்க் செய்யும் வசதி இருக்கிறது. ரிவர்ஸ் கியரை போட்டுவிட்டு, ஆக்சிலேட்டரை மட்டும் லேசாக அழுத்தவேண்டும். சென்சார் உதவியுடன் கார் தானாகவே பார்க் செய்து கொள்ளும்.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 16.81 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உந்துசக்தி

உந்துசக்தி

0-100 கிமீ வேகத்தை 8.68 வினாடிகளில் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 210 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மிஸ்ட்டி புளூ, பேஸன் ரெட், ரா காப்பர் மற்றும் சில்வர் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். பிளாக் சார்கோல், லைட் பிரவுன் மற்றும் பிளாக் சார்கோல், ஹஸல் பிரவுன் கொண்ட இரட்டை வண்ண இன்டிரியர் லெதர்களில் கிடைக்கும்.

வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி
Most Read Articles
English summary
The Swedish automaker Volvo has launched the V40 Cross Country crossover for its Indian customers. Volvo is expected to attract potential customers with its offering of a comprehensive safety, luxury and functional feature package for a price tag that rivals others in its segment. This includes BMW X1, Audi Q3, Mercedes Benz B-Class and perhaps even A-Class and the upcoming BMW 1 Series.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X