வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்! சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ஓடும்! இந்தியாவையே மிரள விட போகும் டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). தற்போதைய நிலையில் இதுதான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Most Affordable Tata Electric Car) ஆகும்.

எனவே வாடிக்கையாளர்களின் விருப்பமான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா டியாகோ இவி இருந்து வருகிறது. இருப்பினும் இதன் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Tata Tiago EV Seats

டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன. இதன்படி டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் (Features) புதிதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய புதிய வசதிகளும், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தற்போது விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இதை விட பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்க முடியும். இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Tiago EV

இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹெச்டி ரியர் வியூ கேமரா மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் ஆகிய வசதிகளையும், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய எல்இடி ஹெட்லைட்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட எல்இடி பகல் நேர விளக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், புதிய டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options), ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும்.

தற்போது விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh ஆகியவை ஆகும். இதில் சிறிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 223 கிலோ மீட்டர்கள் எனவும், பெரிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 293 கிலோ மீட்டர்கள் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய மற்றும் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இருப்பதை காட்டிலும் பெரிய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அவற்றின் விலை உயர்த்தப்படும். ஆனால் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) மாடலின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தாமல், சற்றே குறைத்தது.

இதே பாணியில் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஒருவேளை பாஸ் (BAAS - Battery As A Service) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரை சுமார் 5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே வாங்க முடியும் என்ற சூழல் உருவாகும். ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 2-2.50 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 27, 2026, 17:01 [IST]
English summary
Tata tiago ev facelift to get sunroof and more new features check all details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+