தமிழ்நாட்டில் ஒரேயொரு ஷோரூம் தான் இருக்கு! 1965ல் பெற்ற வெற்றிக்கு இப்போ காரை இறக்கும் பிரிட்டிஷ் கார் கம்பெனி

மோன்டே கார்லோ (Monte Carlo) ரேலி பந்தயத்தில் வெற்றி பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகு, மினி (MINI) நிறுவனம் அதன் பிரபலமான கூப்பர் எஸ் (Cooper S) காரை 1965 விக்டரி எடிஷன் (Victory Edition) ஆக உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.27) முதல் முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் (Special Edition) காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

பிரிட்டிஷ் கார் பிராண்டான மினியின் புகழ்பெற்ற ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரின் இந்த சிறப்புப் பதிப்பு, 1965இல் கோப்பையை வென்ற கூப்பர் எஸ் காரை நினைவுக்கூறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்காக, ஜே.சி.டபிள்யூ பேக்குடன் கூடிய கூப்பர் எஸ் வேரியண்டில் இது கிடைக்கும்.

mini cooper s 1965 victory edition

உலக அளவில், 1965 விக்டரி எடிஷன் எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் ஆகிய இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. இது இரண்டு கதவுகள் கொண்ட கூப்பர் ஹேட்ச்பேக் காரை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இந்தியாவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்படவுள்ளன. இது பிரத்யேக பெயிண்ட், டீக்கால்கள் மற்றும் இந்த பதிப்பிற்கான தனித்துவமான உட்புற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த 1965 விக்டரி எடிஷனின் வெளிப்புறத்தில் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, அதன் பிரத்யேக 'மிளகாய்' சிவப்பு நிற பெயிண்ட் ஆகும். இது காரின் பொனட், கூரை மற்றும் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியில் வெள்ளை நிற பட்டையுடன் வழங்கப்பட்டுள்ளது. கதவுகள் மற்றும் காரின் பின்பக்க பில்லர்களில் '52' என்கிற டீக்கால்களும் இடம்பெற்றுள்ளன.

mini cooper s 1965 victory edition

இந்த எண்கள் ரேஸ் கார்களில் இருப்பதை போன்ற பாணியில் வடிவமைக்கப்பட்டு வெள்ளைத் நிறத்தில் உள்ளன. இந்த எண், 1965இல் கோப்பையை வென்ற மினி கூப்பர் எஸ் காருக்கு ஒரு மரியாதையாகும். இந்த விக்டரி எடிஷன், இரண்டு வண்ணங்களில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள், இரட்டை-குமிழி போன்ற பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் டிஃபியூசரின் கீழ் மறைக்கப்பட்ட ஒரு டெயில்குழாயையும் மத்தியில் கொண்டுள்ளது.

கூடுதலாக, ஜேசிடபிள்யூ பேக் மூலம் காரின் முன்பக்க கிரில் மற்றும் பின்பக்க ஹூட் பகுதிகளில் 'ஜான் கூப்பர் ஒர்க்ஸ்' பேட்ஜ்கள், கருப்பாக்கப்பட்ட மினி பேட்ஜ்கள் மற்றும் வெளிப்புறத்தில் பளபளப்பான கருப்பு நிற ட்ரிம் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இந்த 1965 விக்டரி எடிஷன் காரின் உட்புறமும், மினி கூப்பர் எஸ் காரின் நவீன மற்றும் ஸ்போர்ட்டியான உணர்வுடன், தனித்துவமான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த சிறப்புப் பதிப்பு காரின் உட்புற கதவு பேனல்கள் '1965 விக்டரி எடிஷன்' என்கிற பிராண்டிங்கைப் பெற்றுள்ளன. மோன்டே கார்லோ ரேலி போட்டியின்போது காரை வெற்றிக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர் டிமோ மேக்கினென் மற்றும் இணை ஓட்டுநர் பால் ஈஸ்டர் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த ஸ்பெஷல் எடிஷன் காரின் உட்புற கதவுகள் அமைந்துள்ளன.

லெதர் சுற்றப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் சக்கரத்தில், பல வண்ணங்களில் 6 மணி நேர குறியீடு மற்றும் '1965' லோகோ வழங்கப்பட்டுள்ளது. மினி இந்த லோகோவை சென்டர் ஸ்டோரேஜ் பகுதியிலும் வழங்கியுள்ளது. இது ஒரு துணி போன்ற பொருளால் அலங்கரிக்கப்பட்டு, திறப்பதற்கு ஒரு சிறிய வளையத்தையும் கொண்டுள்ளது. இறுதியாக, சாவி கொத்து கருப்பு நிறத்தில் முடிக்கப்பட்டு '52' லோகோவைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிப்புற மற்றும் உட்புற அலங்காரங்களை தவிர்த்து, இந்த ஸ்பெஷல் எடிஷனின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை. இதனால், மினி கூப்பர் எஸ் காரின் அதே என்ஜின் & கியர்பாக்ஸ் சிஸ்டத்தை தான் இந்த காரிலும் பெறுவீர்கள். வழக்கமான கூப்பர் எஸ் காரில் இருந்து மாறுப்பட்ட காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 27, 2026, 16:38 [IST]
English summary
Mini india opened pre bookings for cooper s 1965 victory edition check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+