டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அப்பன்! ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புது கார்! இனி போட்டி அனல் பறக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan R-Line). கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை, இதுதான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த ஃபோக்ஸ்வேகன் காராக இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த பெருமையை, ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) தட்டி சென்றுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் காரின் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட வெர்ஷன் ஆகும்.

Volkswagen Tayron R-Line

அதாவது ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் கார் 2 வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 5 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் கார் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கும். எனவே அதில் 7 பேர் பயணம் செய்யலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் காரின் விலை 45.73 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் விலை வெறும் 46.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் காருடன் ஒப்பிடும்போது, ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் விலை வெறும் 1.26 லட்ச ரூபாய் மட்டுமே அதிகம்.

Volkswagen Tayron R-Line

இவை அனைத்துமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 201 பிஹெச் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜினுடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில், 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, அனைத்து இருக்கைகளுக்கும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்கள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 11 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 30 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 9 ஏர்பேக்குகள், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட்கள் போன்ற அம்சங்கள் எல்லாம், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் கருதப்படுகிறது. இந்த சூழலில், இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு, ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் கார் தற்போது வர தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் இந்த காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), ஜீப் மெரிடியன் (Jeep Meridian), எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 26, 2026, 16:57 [IST]
English summary
Volkswagen tayron r line start arriving at showrooms video check all details here
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+