மாருதியை முளையிலேயே கிள்ளி எறிய போகும் டாடா! தலை தூக்க விட்ற கூடாதுனு கங்கணம் கட்டியிருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra SUV) கார், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தயாராகி வருகிறது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கிறது.

Tata Sierra EV

இதற்கு தற்போது நமக்கு விடை கிடைத்துள்ளது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் நடப்பு 2026ம் ஆண்டின் 2வது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் முன் பக்க டேஷ்போர்டில், அதன் ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவே, 3 திரைகள் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை ஆகியவையாக இருக்கலாம்.

Tata Sierra EV Front Design

அத்துடன் டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனில் உள்ள பனரோமிக் சன்ரூஃப், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், சப் வூஃபர் உடன் ஜேபிஎல் 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டாடா சியரா காரின் பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் 65 kWh பேட்டரி தொகுப்பு மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் 55 kWh பேட்டரி தொகுப்பு ஆகியவற்றை, டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில், பாஸ் (Battery As A Service - BAAS) திட்டமும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் பாஸ் முறையில் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரை வாங்கினால், அதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3.5-4 ரூபாய் வரை தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலைகள் அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடதக்கது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. பாஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே எலெக்ட்ரிக் கார் இதுதான்.

ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் தனது மற்ற எலெக்ட்ரிக் கார்களுக்கும் கூடிய விரைவில் பாஸ் திட்டத்தை விரிவுபடுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் அறிமுகத்தின்போதே, பாஸ் திட்டத்தை நம்மால் சற்று உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ விட்டாராதான், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 26, 2026, 18:13 [IST]
English summary
Tata sierra ev india launch nears expected baas price battery options features and more
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+