கார்களுக்கான வாரண்டி விபரங்கள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்- பகுதி 1

ஸ்கோடா யெட்டி
புதிய கார்களுக்கு தரப்படும் வாரண்டி எனப்படும் உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு, தயாரிப்பாளருக்கும் இடையிலான சட்டப்பூர்வமான ஒப்பந்தம். கார் வாங்கிய பின் ஒருவேளை அதில் ஏதெனும் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது பிரச்னைகள் எழும்போது பிரச்னையை கட்டணமின்றி இலவசமாக சரி செய்து தருவதற்கும் அல்லது சம்பந்தப்பட்ட பாகத்தை முற்றிலுமாக மாற்றி தருவதற்கும் வாரண்டி பயன்படுகிறது.

வாரண்டி கவரேஜ்:

எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் வாரண்டியின் கீழ் இருக்கும். பொதுவாக இரணடு ஆண்டுகள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. தவிர, அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் கூட கூடுதல் கட்டணம் செலுத்தினால் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வாகன தயாரி்ப்பாளர்கள் வழங்குகின்றனர். இது ஒவ்வொரு நிறுவனங்களுக்கு இடையே மாறுபடும்.

வாரண்டியின் கீழ் வரும் பாகங்கள் குறித்து கொடுக்கப்படும் பிரசுரத்தை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், பிரேக் பேட்கள், பல்புகள், கிளட்ச் டிஸ்க் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பாகங்கள் பெரும்பாலும் வாரண்டி கீழ் கொடுக்கப்பட்டிருக்காது. இதேபோன்று, டயர், பேட்டரி போன்றவற்றிருக்கு கார் தயாரிப்பாளர் வாரண்டி கொடுப்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் தனி வாரண்டி வழங்கப்படும். எனவே, வாரண்டி கார்டுடன் கொடுக்கப்படும் விபர அறிக்கையை தெளிவாக படித்துக் கொள்வது அவசியம்.

வாரண்டி நிபந்தனைகள்:

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் மட்டுமே வாகனத்தை சர்வீஸ் செய்வது அவசியம். சர்வீஸ் கார்டில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அட்டவணையின்படி, சரியான கால அளவில் சர்வீஸ் செய்வதும் முக்கியம்.

இதைவிட முக்கியமானது காரின் எஞ்சின் மற்றும் பிற முக்கிய பாகங்களில் மாற்றங்கள் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு அதிக பிக்கப் கொடு்ப்பதற்காக எஞ்சின் மற்றும் புகைபோக்கியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் வாரண்டி பெற இயலாது. இதேபோன்று, தயாரிப்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை தவிர பிற சர்வீஸ் மையங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சிலிண்டர் பொருத்தினாலும் வாரண்டி கிடைக்காது.

சிலர் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை வாங்கி பொருத்த விரும்பலாம். டீலர்களை விட வெளியில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆக்சஸெரீஸ்களை வாங்கி பொருத்தும்போது வாரண்டி நிபந்தனைகளை தெளிவாக படித்துக் கொண்டு பின்னர் வாங்கி பொருத்தினால் வாரண்டி பாதிக்காது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 5, 2012, 13:35 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+