ஹலோ, ஹலோ ... மைலேஜ் டெஸ்ட்டிங்...!!
பெட்ரோல் விலை உச்சாணியில் ஏறியதால் மைலேஜ், மைலேஜ் என தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கார் ஷோரூமுக்கு சென்றவுடன் அவர்கள் கொடுக்கும் புரொஷரை பார்த்தவுடன் 25.4 கிமீ மைலேஜ் தரும், 22.7 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், உண்மையில் இந்த மைலேஜ் கிடைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் பெரும்பாலானோரிடமிருந்து வருகிறது. எனவே, கார்களின் உண்மையான மைலேஜை தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த செய்தி அமைகிறது.
கார் வைத்திருக்கும் வாசகர்கள் தங்களது காரின் நகர்ப்புற மற்றும் நெடுந்தூர பயணங்களின்போது தரும் மைலேஜ், கார் மாடல் மற்றும் வாங்கிய ஆண்டு ஆகியவற்றை கருத்துப் பெட்டியில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இதன்மூலம், கார்களின் சரியான மைலேஜ் விபரங்களை அனைவரும் தெரிந்துகொள்வதோடு, தங்களது நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ய வழிபிறக்கும். புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
வாசகர்கள் தெரிவித்த பைக் மைலேஜ் விபரங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கார் நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்படும் மைலேஜ் விபரங்களை ஒப்பீடு செய்வதற்காக சில முக்கிய மாடல்களின் மைலேஜ் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ/லி
சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.46 கிமீ/லி

டாடா நானோ
டாடா நானோ 624சிசி பெட்ரோல் எஞ்சின்- 25.4கிமீ/லி

ஹூண்டாய் இயான்
814சிசி பெட்ரோல் எஞ்சின்- 21.1 கிமீ/லி

ஹூண்டாய் ஐ10
1.2 லிட்டர் கப்பா - 20.36 கிமீ/லி

ஹோண்டா பிரியோ
1.2 லிட்டர் விடெக் பெட்ரோல் எஞ்சின் - 19.4 கிமீ/லி

மாருதி வேகன்-ஆர்
1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் - 18.9கிமீ/ லி

மாருதி ஸ்விப்ட்
1.2 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் - 18.9 கிமீ/லி
1.3 லிட்டர் டீசல் எஞ்சின்- 22.9 கிமீ/லி

செவர்லே பீட்
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் - 18.6கிமீ/லி
1.0 லிட்டர் டீசல் எஞ்சின் - 25.4 கிமீ/லி


Click it and Unblock the Notifications








