கிடுகிடுவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. 300 இன்ச்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?

By Prakash S

4கே சப்போர்ட் கொண்ட இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் (E Gate Zen 7X Google TV Projector) ஆனது தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் ஆனது மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இ கேட் ப்ரொஜெக்டர் மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

முன்பு இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் ரூ.30,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் எள்ளது. எனவே இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடலை ரூ.17240 விலையில் வாங்கிவிட முடியும்.


e-gate-zen-7x-google-tv-projector-

இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (E Gate Zen 7X Google TV Projector Specifications): இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளது. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

700 ஐஎஸ்ஒ லுமன்ஸ் (700 ISO Lumens) பிரைட்னஸ் வசதியுடன் இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. அதேபோல் 60000 மணி நேர லேம்ப் லைஃப் (60000 Hours Lamp Life) வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச், 150 இன்ச் டிவிகளை வாங்க அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

குவாட் கோர் பிராஸசர் உடன் இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இ கேட் ஜென் 7எக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்தது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.


e-gate-zen-7x-google-tv-projector-

குறிப்பாக ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ 4D+4P கீஸ்டோன் (Auto 4D + 4P Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.2, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. பவர்ஃபுல் டவுன் ஃபயரிங் கேவிட்டி ஸ்பீக்கர் மற்றும டால்பி சரவுண்ட் ஆதரவுடன் இ கேட் ஜென் 7எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

Credit: Gizbot

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 9:34 [IST]
English summary
E Gate Zen 7X Google TV Projector price Drop on Amazon: Check price, specifications
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+