Weekend-இல் தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இத முதல்ல படிச்சிட்டு முடிவெடுங்க!!

By Devika Manivannan

வேலைக்கு செல்பவர்கள் நகை வாங்கும் திட்டம் இருந்தால் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் நகை கடைக்கு செல்வார்கள். சிலர் வீக் எண்டில் தி.நகர் உள்ளிட்ட இடங்களுக்கு ஷாப்பிங் செல்லும் போது அப்படியே நகை கடைகளுக்கு ஒரு விசிட் அடிப்பார்கள்.

வழக்கமான நாட்களை விட வார இறுதி நாட்களில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தான் சனிக்கிழமை மாற கூடிய தங்கம், வெள்ளி விலைகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இந்த வாரம் முழுவதும் தங்கம், வெள்ளி விலை என்னவானது, இன்று ஒரு கிராம் விலை என்ன என்பன உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்க்கலாம்.


Gold silver investment

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் திங்கள்கிழமை அன்று கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செவ்வாய், புதன் என அடுத்தடுத்த மூன்று நாட்கள் குறைந்த தங்கம் வியாழன்று தடாலடியாக விலை உயர்ந்து 14,500 ரூபாய் என ஆனது. வெள்ளிக்கிழமையான நேற்று தங்கம் விலை சற்றே குறைந்தது. ஆனால் இன்றைய தினம் மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,420 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 260 ரூபாய் விலை கூடி 14,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1,15 ,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 2080 ரூபாய் விலை உயர்ந்து 1,17, 440 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 1,46, 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்: இறக்குமதி உயர்வு.. விற்பனை சரிவு.. அப்போ எல்லா தங்கமும் எங்க போகுது?

சென்னையில் கடந்த ஒரு திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த ஆறு வர்த்தக நாட்களில் தங்கம் விலை நான்கு நாட்கள் விலை குறைந்து இருக்கிறது. இரண்டு நாட்கள் விலை கூடி இருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரையில் ஒரு கிராம் 284 ரூபாய் விலை உயர்ந்து 16,015 ரூபாய்க்கும் ஒரு சவரன் 2,272 ரூபாய் விலை உயர்ந்து 1, 28,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் மீண்டும் 1 லட்சம் ரூபாயை கடந்து விட்டது. இன்று சென்னையில் 18 கேரட் தங்கம் 1,00,480 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?

தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வந்த வெள்ளியின் விலை இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது. திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 6 வர்த்தக நாட்களில் தங்கம் விலை இரண்டு நாள் உயர்ந்திருக்கிறது, இரண்டு நாள் குறைந்து இருக்கிறது, இரண்டு நாட்கள் விலை மாற்றம் இல்லை. திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே ஏறுவதும் இறங்குவதும் என இருந்து இன்று 290 ரூபாயாக மாறி இருக்கிறது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாயும் கிலோ 20,000 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Saturday, February 21, 2026, 12:54 [IST]
English summary
Gold and Silver rate in Chennai increased today. As it is Saturday same price will be applicable until Monday morning. Here are the todays gold and silver price details.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+