நம்ப வைத்து ஏமாத்திய கெவின் வார்ஷ்.. தங்கம் விலை இனி தாறுமாறாக உயர போகுது..!!

By Prasanna Venkatesh

தங்கம் விலை இன்று ஆசிய வர்த்தக நேரத்தில் ஒரு வாரத்திற்கு பின்பு 5000 டாலரை தாண்டி 5,065 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. இதனால் தங்கம் விலை மீண்டும் உயரும் போக்கு தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் தங்கம் விலை உயர்ந்தால் சோகம் அடைவோர் எண்ணிக்கையும், மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை சமமாக உள்ளது. இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை. இன்றைய விலை உயர்வுக்கான முக்கிய காரணம் டிரம்ப் நியமித்த புதிய பெடரல் ரிசர்வ் கவர்னர் தான்.


gold price rebound xau usd forecast kevin warsh fed nomination fed interest rate outlook gold after sell off safe haven demand gold cme fedwatch june rate cut XAU USD

தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வரலாற்று ரீதியான கடுமையான சரிவுக்குப் பிறகு 2 நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் தற்போது அமெரிக்க பொருளாதாரம், வர்த்தகம், பணவீக்க தரவுகளை ஆய்வு செய்து தங்கம் மீது மீண்டும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

கெவின் வார்ஷ் ஃபெடரல் ரிசர்வ் (Fed) தலைவராக நியமிக்கப்பட்டது மூலம் தங்க விலை உயர்வுக்கு எண்ட் கார்டு போட்டாசு என்ன முதலீட்டாளர்கள் கணித்தனர். ஆனால் தற்போது 'இந்த' நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியிலும், பொருளாதார வல்லுனர்கள் மத்தியிலும் மாறுப்பட்டு உள்ளது.

முதலீட்டு சந்தை கெவின் வார்ஷை "ஹாக்கிஷ்" தேர்வாக பார்க்கிறது. இதனால் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்த நிலையில் தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரி இறுதியில் ஃபெட் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்தது.

இதனால் ஜூன் மாத கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்புக்கான வாய்ப்பு 66 சதவீதமாக குறைந்துள்ளது என்று CME FedWatch கருவி தெரிவிக்கிறது. கெவின் வார்ஷ் வருகை மூலம் குறுகிய கால வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டதாலேயே பத்திர சந்தையில் முதலீடு செய்ய தங்கம் மீதான முதலீடுகள் விற்கப்பட்டது. தற்போது வட்டி குறைப்புக்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் தங்கம் விலை உயர துவங்கியுள்ளது.

இந்த நிலையில் தான் தங்கம் விலை 2 நாட்களாக மீண்டு வருகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான சரிவு பிறகு இது ஒரு நிவாரண ரேலியாக தோன்றுகிறது. அமெரிக்க பொருளாதார அடிப்படைகள் மற்றும் புவிசார் சூழல் தங்கத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 12:07 [IST]
English summary
Gold prices rebounded toward $5,065 in early Asian trade after last week's historic sell-off, supported by renewed safe-haven demand. However, upside momentum remains capped as markets react to Kevin Warsh's nomination as US Federal Reserve chair. Seen as a hawkish policymaker, Warsh's potential leadership has reduced expectations of near-term rate cuts, keeping traders cautious amid incoming US economic data.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+