தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

By Devika Manivannan

சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து பொது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வழக்கமாகவே புவி சார் பதட்டங்கள், மோதல்கள் , போர் உள்ளிட்டவை ஏற்படும் போது உலக அளவில் தங்கத்தின் விலை உயரும், இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர்வை நம்மால் காண முடியும்.

ஆனால் இந்த முறை ஈரானில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது, அதற்கு மத்தியிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து பெரிய சர்ப்ரைஸை தந்திருக்கிறது. சென்னையில் மார்ச் இரண்டாம் தேதி அதாவது திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரை தொடர்ந்து நான்கு நான்கு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.


Gold silver investment

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது., ஒரு சவரன் தங்கம் நேற்று 1, 21, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்று 640 ரூபாய் குறைந்து 1, 20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த நான்கு நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 655 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 5,240 ரூபாய் சரிவு கண்டிருக்கிறது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வீடுகளில் விசேஷம் வைத்திருப்பவர்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

அடுத்ததாக 24 கேரட் தங்கத்தை கொடுத்த வரை சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் 16, 495 ரூபாய்க்கு ஒரு சவரன் 1,31,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1, 64, 950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,95,000 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தை பொருத்தவரை இன்றைய தினம் 10 கிராம் தங்கம் 1,62,680 ரூபாய் என வர்த்தகத்தை தொடங்கியது அதேபோல ஒரு கிலோ வெள்ளியை பொருத்தவரை 2,71,000 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் வாங்குற பிளான் இருக்கா? போன்ல இந்த APP வச்சிக்கோங்க போலி தங்கத்த ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்!!

ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் லாபத்தை எடுத்து டாலர் பக்கம் திரும்பி வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்து இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2026, 10:26 [IST]
English summary
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite iran war
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+