Gold Rate Today: வரலாறு காணாத சரிவை நோக்கி தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே மெகா இன்ப செய்தி!
சென்னை: கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்திற்குப் போன தங்கம் விலை இப்போது வேகமாகச் சரிந்து வருகிறது. வரலாறு காணாத வகையில் தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், இன்றைய தினமும் காலையில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது. அது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ள நிலையில், வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி விலையில் பெரிய சரிந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்திற்குப் போனது. ஒரே மாதம் கூட ஆகாத நிலையில், கிட்டத்தட்ட 10%க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டே தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் கதறிய நிலையில், இந்தாண்டு தொடக்கத்திலும் விலை இப்படித் தாறுமாறாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரம்பும் தங்கமும்
இதற்குப் பிரதானக் காரணமாக டிரம்ப் இருந்தார். அவர் இஷ்டத்திற்குத் தனது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும் உத்தரவிடுவதுமே தங்கம் விலையை எங்கோ உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. வெனிசுலா படையெடுப்பு, கிரீன்லாந்து விவகாரம் ஐரோப்பிய நாடுகள் மீது வரியை என டிரம்ப் திடீர் திடீரென உத்தரவுகளைப் பிறப்பிக்கவே அது நேரடியாகத் தங்கச் சந்தைகளில் எதிரொலித்தது. வரலாறு காணாத விலைக்குத் தங்கத்தை எடுத்துச் சென்றது.
எப்போதும் இப்படிக் குழப்பமான அல்லது சர்வதேச பதற்றமான சூழல்களில் தங்கம் விலை உயரும். அதாவது தெளிவற்ற சூழல் இருக்கும்போது ரிஸ்க் வேண்டாம் என்பதற்காக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வார்கள். இது தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். கடந்த மாதமும் அதுவே தான் நடந்து தங்கம் விலையை உச்சத்திற்கு எடுத்துப் போனது.
மிக பெரிய சரிவு
ஆனால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. டிரம்ப் புதிய பெடரல் வங்கி தலைவரை அறிவித்த பிறகு, இந்தச் சரிவு வேகமாகவே இருக்கிறது. சர்வதேச சந்தையில் 5600 டாலர் வரை போன ஒரு அவுன்ஸ் தங்கம் இப்போது 4700 டாலர் வரை சரிந்துவிட்டது. இதுவே விலை குறையக் காரணம்.
இன்றைய தினமும் கூட காலையில் சந்தை ஆரம்பித்தது முதலே சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தே வருகிறது. அதுவே இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.
சென்னையில் தங்க நகையை பில் போட போனபோது இறங்கிய இடி! பெரிய தொகை நஷ்டம்.. கதறும் மக்கள்! என்னாச்சு
விலை என்ன
சென்னையில் ஜனவரி 31ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 7600 குறைந்து ஒரு சவரன் ரூ 1,19,200 -க்கும், கிராமுக்கு ரூ 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 55 குறைந்து ஒரு கிராம் ரூ 350-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,50,000-க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.7600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
"ரூ.12,500" தங்கம் விலையில் ஏற்பட போகும் இமாலய மாற்றம்! ஆனால்.. பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








