தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தது இவ்வளவு பெரிய தப்பா..? ஓரே நாளில் மொத்தமும் போச்சு..!!

By Prasanna Venkatesh

முதலீட்டு சந்தையில் கடந்த ஒரு வருடமாக சூப்பர்ஸ்டாராக இருந்த தங்கம், வெள்ளி இன்று பெரும் பாதிப்பை எதிர்கொண்டு முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. ரீடைல் சந்தையை காட்டிலும் ETF முதலீட்டில் இதன் மதிப்பை பெரிய அளவில் குறைத்துள்ளது பெரும் சோகம். அதாவது உலோக விலையை காட்டிலும், பேப்பர் உலோகத்தின் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் (ETFs) வியாழக்கிழமை கடுமையான சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் கிடைத்த வரைக்கும் லாபம் போதும் என முடிவு செய்த காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரையில் லாபத்தை புக் செய்ய ஈடிஎப் முதலீட்டை விற்றனர். இதனால் தங்கம் வெள்ளி மீது இருந்த பிரீமியம் கணிப்புகள் உடைந்து தொடர்ந்து உயர்ந்த வந்த உலோகம் இன்று பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.


Gold ETF crash India Silver ETF fall precious metals selloff gold investment risk silver ETF volatility Indian ETF market safe haven assets Trump tariff impact market correction gold ETF fell 18 percent silver ETF crash 20 percent India gold ETF news silver ETF today India precious metals profit booking Trump tariff comments gold safe haven demand fall ETF premium collapse gold silver investment risk ETF ETF ETF ETF 18 ETF 20 ETF

ரீடைல் சந்தையில் தங்கம் கிராமுக்கு 235 ரூபாய், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் மட்டுமே சரிந்தாலும், ETFகளில் சுமார் 18-20% வரை சரிந்துள்ளன.

உதாரணமாக குவாண்டம் கோல்ட் ஃபண்ட் ETF 18% குறைந்தது. ஜீரோதா கோல்ட் ETF 14% சரிந்தது. SBI கோல்ட் ETF மற்றும் நிப்பான் இந்தியா ETF கோல்ட் பீஸ் ஆகியவை தலா 12% சரிந்தன.

இதேபோல் வெள்ளி ETFகளில் நிப்பான் இந்தியா சில்வர் ETF, ICICI ப்ருடென்ஷியல் சில்வர் ETF, கோடக் சில்வர் ETF ஆகியவை காலை வர்த்தகத்தில் 19-20% சரிந்தன. இவை iNAV-ஐ விட குறைவாக வர்த்தகமாகியது வருத்தமான செய்தியாகும்.

முதலீட்டாளர்களின் இந்த கடும் விற்பனை ETF சந்தையில் மட்டுமே அதிகம் காணப்பட்டது. உள்நாட்டு MCX ஃபியூச்சர்ஸ் மற்றும் உலகளாவிய ஸ்பாட் சந்தைகளில் சிறிய அளவிலான சரிவு மட்டுமே பதிவாகின. உலகளாவிய ஸ்பாட் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 92.27 டாலர் அருகே நிலைத்தது. செவ்வாய்கிழமை 95.87 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட பிறகு இது சிறிய அளவிலான சரிவு மட்டுமே.

இந்த மோசமான சரிவுக்கு காரணம் டிரம்ப், ஆம் நேற்று டாவோஸ் மாநாட்டில் கலந்துக்கொண்டு டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு விதித்த வரியை விதிக்க மாட்டேன் என்று அறிவித்ததால், கிரீன்லாந்து நாட்டை ராணுவத்தை கொண்டு கைப்பற்ற மாட்டேன் என உத்தரவாதம் கொடுத்த காரணக்தாலும் பாதுகாப்பான சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை முதலீட்டு சந்தையில் குறைந்தது.

இதன் எதிரொலியாக உலகளாவிய முதலீட்டு சந்தைகளில் ரிஸ்க் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைத்தது. இந்தியாவில் லாப புக் செய்யும் முதலீட்டாளர்கள் ETFகளை விற்றதால் சரிவு அதிகரித்தது. இந்த முதலீடுகள் பங்குச்சந்தை பக்கம் திரும்பியது.

உலகளாவிய வர்த்தக பதற்றம் மற்றும் அமெரிக்காவின் தொடர்ந்து மாறி வரும் நிலைப்பாடு தங்கம் & வெள்ளிக்கு தொடர்ந்து பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் குறுகிய காலத்தில் லாபத்தை எடுப்பது மற்றும் பிரீமியம் இழப்பு ஆகியவை ETFகளில் கடும் சரிவுக்கு தள்ளியுள்ளது.

முதலீட்டாளர்கள் இந்த சரிவை வாய்ப்பாக பார்க்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய பதற்றம் தொடர்ந்தால் பாதுகாப்பான சொத்துகளின் தேவை மீண்டும் அதிகரிக்கலாம். தற்போதைய சரிவு தற்காலிகமானது தான்.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Thursday, January 22, 2026, 20:01 [IST]
English summary
Indian gold and silver ETFs witnessed a sharp crash of up to 20% in a single session as heavy profit-booking erased speculative premiums built during the recent rally. While global gold and silver prices corrected only modestly, inflated ETF valuations collapsed rapidly. The sell-off followed easing global risk fears after Donald Trump softened tariff threats, triggering sudden exits from precious metal ETFs.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+