புதிய ஆதார் செயலி மூலம் முகவரியை மாற்றுவது எப்படி? இதோ வழிமுறைகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் அதார் தொடர்பான சேவைகளையும் எளிதாக்கும் வகையில் மத்திய அரசு ஆதார் மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த செயலியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், மொபைல் நம்பர் அப்டேட் மற்றும் முகவரி அப்டேட் செய்யும் வசதிகள் உள்ளன.
அதாவது முன்பு ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண், முகவரி போன்றவற்றை மாற்ற ஆதார் மையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டி நிலைமை இருந்தது. ஆனால் இனி ஆதார் செயலி மூலம் மொபைல் எண் அப்டேட் மற்றும் முகவரி அப்டேட் எளிமையாகச் செய்ய முடியும். சரி இப்போது ஆதார் செயலியில் முகவரியை மாற்றுவது எப்படி என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆதார் செயலியில் முகவரி மாற்றுவது எப்படி?
1.கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2.அடுத்து அந்த செயலியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் வைத்து உள்நுழையவும்.
3. அதன்பின்னர் ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் update Aaadhaar Address எனும் விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்யவும்.
4. அதன்பிறகு using Your Document என்பதை கிளிக் செய்தால், உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும், அதனை உள்ளிட்டு, நீங்கள் எந்த சான்றிதழ்களை உள்ளிட போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும்.
5. குறிப்பாக நீங்கள் கொடுக்க இருக்கும் சான்றிதழை pdf அல்லது ஸ்கேன் செய்து உள்ளிட வேண்டும். இதன்பிறகு, முகவரி மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.75 ஆக செலுத்த வேண்டும். அதுவும் யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ரூ.75 செலுத்த முடியும்.
6. அவ்வளவு தான் உங்களது ஆதாரில் முகவரி 15 நாட்களில் அப்டேட் ஆகிவிடும். உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு இதற்கான அப்டேட் குறித்த மெசேஜ் வரும். இதன் மூலம் உங்கள் ஆதார் அப்டேட் ஆனதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
சிலிண்டர் பில், மத்திய அரசு வழங்கும் ஆவணங்கள், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் பில்,தொழிலாளர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, மின் கட்டணம் பில், திருமண சான்றிதழ், வங்கி புத்தகம், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட், மெடிக்கல் இன்சூரன்ஸ், சொத்து வரி சான்றிதழ், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட சான்றிதழ் என இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, ஆதாரில் முகவரியை மாற்ற பயன்படுத்தலாம். சரி இப்போது இந்த ஆதார் செயலியில் மொபைல் எண் மாற்றுவது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது எப்படி?
1.உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2.அடுத்து அந்த செயலியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் வைத்து உள்நுழையவும்.
3. இப்போது ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

4. அதன்பின்னர் நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்
5. ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.
Credit: Gizbot


Click it and Unblock the Notifications








