அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சவரனுக்கு ரூ.9,000க்கு மேல் உயர்ந்த தங்கம்!! புதிய உச்சத்தில் வெள்ளி!!

By Devika Manivannan

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவதற்கான அறிகுறிகளே இல்லை எனக் கூறும் அளவிற்கு இரண்டாவது நாளாக பெரிய அளவு விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்வு கண்டது. இந்த நிலையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கம் விலை நேற்று ஒரு கிராம் 13,450 ஆக இருந்தது அதுவே இன்று 160 ரூபாய் உயர்வு கண்டு 13,610 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை ஆகும். ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,07,600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் 1280 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,08,880 ரூபாய் என புதிய வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது. 10 கிராம் தங்கம் 1, 36,100 ரூபாய் என விற்பனையாகிறது.


Gold silver investment

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் கிட்டத்தட்ட 1.10 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நாளைய தினமும் இதேபோல விலையேற்றம் இருந்தால் நிச்சயம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,10,000 ரூபாயை கடந்து விடும். இன்றைய தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் சராசரியாக நாம் 1.30 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகி இருக்கிறோம்.

தங்கத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான இந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு கிராமுக்கு 330 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2640 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதியோடு ஒப்பிட்டு பார்த்தால் சவரனுக்கு கிட்டத்தட்ட 9,360 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 14,673 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 175 ரூபாய் விலை உயர்ந்து 14, 848 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1400 ரூபாய் விலை உயர்ந்து 1,18,784 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1,48,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் ஒரு நாளில் இது 1.5 லட்சத்தை எட்டி விட வாய்ப்பு இருக்கிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,355 ரூபாய்க்கும் ஒரு சவரன் வரலாற்று உச்சமாக 90,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!

தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் வெள்ளியின் விலை புதிய வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 330 ரூபாயை தொட்டுவிட்டது. ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. நேற்று 318 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3,30,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 20,000 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் வலுத்திருப்பது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 13:02 [IST]
English summary
As the Greenland issue between US and EU countries intensifies the Gold and Silver rates are spiking to New High , investors moved their money to safe haven assets.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+