IND vs NED: மாபெரும் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி.. ஒரு மேட்ச் விடாமல் விக்கெட் வீழ்த்தி சாதனை
அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். சக வீரரான அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசினார்.

பவர் பிளேயில் விக்கெட்
நெதர்லாந்து இன்னிங்ஸின் பவர் பிளே ஓவரின் கடைசி ஓவரை (6வது ஓவர்) வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில், நெதர்லாந்து தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டவுட் விக்கெட்டை வீழ்த்தினார். வருண் வீசிய பந்து பேட்ஸ்மேனை ஏமாற்றி ஸ்டம்பைத் தாக்கியது.
17 போட்டிகளில் தொடர் விக்கெட்
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 17 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற அர்ஷ்தீப் சிங்கின் சாதனையை வருண் சக்கரவர்த்தி சமன் செய்தார். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜூன் 2024 முதல் டிசம்பர் 2025 வரை இந்திய அணிக்காக விளையாடிய தொடர்ந்து 17 போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியிருந்தார். அந்தச் சாதனையைத் தற்போது வருண் சக்கரவர்த்தி எட்டியுள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வருண் சக்கரவர்த்தி விளையாடிய எந்தவொரு டி20 போட்டியிலும் விக்கெட் எடுக்காமல் திரும்பியதில்லை. இந்த 17 போட்டிகளில் மட்டும் அவர் மொத்தம் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
வருண் சக்கரவர்த்தி - 17 போட்டிகள்*
அர்ஷ்தீப் சிங் - 17 போட்டிகள்
ஆஷிஷ் நெஹ்ரா - 13 போட்டிகள்
பாகிஸ்தான் அணியில் வெடித்த சண்டை.. பாட்டிலை ஓங்கி அடித்த கேப்டன்.. விழி பிதுங்கி நின்ற பாபர் அசாம்
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக 1 விக்கெட், நமீபியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள், பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட்டுகள், தற்போது நெதர்லாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தியின் இந்த ஃபார்ம் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
IND vs NED: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மட்டுமே செய்த ஆல்-ரவுண்டர் ரெக்கார்டை செய்த சிவம் துபே
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








