IND vs NZ: இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என்ட்ரி.. கில்லின் ரியாக்ஷன் என்ன? நியூசிலாந்து டாஸ் வெற்றி

By Aravinthan

ராஜ்கோட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வென்றுத் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் டாஸ் வென்றுள்ளார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல் தயக்கமின்றி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். "மைதானத்தின் தன்மை சிறப்பாக உள்ளது. நாங்கள் முதலில் பந்துவீசி, எதிரணியின் ஸ்கோரை துரத்த விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக ஜெய்டன் லெனாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.


IND vs NZ 2nd ODI New Zealand Win Toss and Opt to Bowl Nitish Kumar Reddy Debuts for Team India in Rajkot

டாஸ் இழந்தாலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் கவலைப்படவில்லை. "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியிருப்போம். நேற்று பனிப்பொழிவு எதுவும் இல்லை. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச் சற்று வேகம் குறையலாம். அதனால் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை குவிப்பது நல்லது. நான் பேட்டிங் செய்ய மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்," என்று கில் தெரிவித்தார்.

காயம் காரணமாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக வாய்ப்புக்காகக் காத்திருந்த அவருக்கு இது மிகச்சிறந்த தருணமாகும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர், ராஜ்கோட் மைதானத்தில் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக உள்ளது. நேராக 75 மீட்டரும், ஸ்கொயரில் 65 மீட்டரும் கொண்ட பவுண்டரி எல்லைகள் உள்ளன. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச். பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் திணற வேண்டியிருக்கும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 320-க்கு மேல் என்பதால், இன்று இந்திய பேட்ஸ்மேன்களிடமிருந்து சரவெடியை எதிர்பார்க்கலாம்.

IND vs NZ: கம்பீர் vs அகர்கர் மோதல்? இந்திய அணியில் நடப்பது என்ன? குண்டை தூக்கிப்போட்ட ஆகாஷ் சோப்ரா

இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா.

நியூசிலாந்து அணி:

டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், சாக் ஃபௌல்க்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் லெனாக்ஸ்.

Credit: Mykhel

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 19:00 [IST]
English summary
IND vs NZ 2nd ODI: New Zealand Win Toss and Opt to Bowl; Nitish Kumar Reddy Debuts for Team India in Rajkot
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+