IND vs PAK: பாபர் அசாம் இந்தியாவின் Spy.. இந்த 2 பேரையும் அடித்து விரட்டுங்கள்.. பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்

By Javid Ahamed

கொழும்பு: 2026 ஐசிசி டி20 உலககோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை அடுத்து, பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான முகமது யூசுப் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முகமது யூசுப் தனது எக்ஸ் ளத்தில், “ஷாஹீன், பாபர், ஷதாப் ஆகியோரின் நேரம் முடிந்துவிட்டது. பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய வீரர்கள் தேவை. பலவீனமான அணிகளுக்கு எதிரான வெற்று வெற்றிகள் தேவையில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.


யூசுப் மட்டுமல்ல, இத்தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியிலும் பாபர் அசாமை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போட்டியில் பாபர் வெறும் 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது விமர்சனங்களை மேலும் அதிகரித்தது.

IND vs PAK: நீ எங்க ஆளு யா! 5 ரன்களில் பாபர் அசாம் அவுட்.. இந்திய ரசிகர்கள் கிண்டல்.. பாக். இதயம் நொறுங்கியது

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் ரசிகர் , "பாபர் அசாம் இது போன்ற போட்டிகளுக்காகவே தேர்வு செய்யப்பட்டார். 170 இலக்கைத் துரத்தும்போது அவர் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். தேவையில்லாதபோது மெதுவாக விளையாடும் அவர், தேவைப்படும்போது தவறான ஷாட் ஆடி ஆட்டமிழப்பார். அவரை அதிகட் நம்பினோம். ஆனால் எங்களை ஏமாற்றி விட்டார்" என்று விமர்சித்தார்.

மற்றொரு ரசிகர் ஒருவர், "2022 உலகக் கோப்பையில் விராட் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது போல பாபர் அசாம் விளையாடி இருக்க வேண்டும். அதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். இருவரையும் இனி ஒப்பிடவே கூடாது" என தெரிவித்தார்.

இது போன்று இந்திய ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர். "பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது சட்டவிரோதமாக இருக்க வேண்டும். ஒருவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் எதிராளிகளை ஆதிக்கம் செலுத்துகிறார், மற்றவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேரழிவை ஏற்படுத்துகிறார். எங்களுக்கு எதிராக அவர் ஒருமுறைகூட சிறப்பாகச் செயல்பட்டதில்லை" என்று காட்டமாக விமர்சித்தார்.

"ரோஹித், விராட் போன்றவர்களுடன் பாபரை ஒப்பிடுவது அவரது பெரிய சாதனை. உள்ளூர் போட்டிகளிலேயே பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஏராளம். பாகிஸ்தான் ஒரு சராசரி வீரரைக் கிடைத்ததும் அவரைப் பெரிதாகப் பாராட்டுகிறது" என்றார். பாபர் அசாம் இந்திய உளவாளியாக செயல்பட்டதாகச் சிலர் விமர்சித்தனர்.

IND vs PAK: வெற்றியை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார்

இவ் வெற்றியின் மூலம் இந்தியா டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இஷான் கிஷனின் 77 ரன்கள் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எட்டியது. இறுதியில், பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதுவரை நடந்துள்ள ஒன்பது டி20 உலகக் கோப்பை சந்திப்புகளில் இந்தியா எட்டு முறையும், ஒருநாள் உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Credit: Mykhel

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 10:11 [IST]
English summary
India secured a 61-run victory over Pakistan in the T20 World Cup, led by Ishan Kishan's 77 and a strong team display. The win advances India to the Super Eight, while sparking discussion about potential changes to Pakistan's squad and leadership after the defeat.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+