IND vs PAK: "வா மா மின்னல்" பாபர் அசாமை கிண்டல் செய்த அஸ்வின்.. கிங்-லிருந்து ஜோக்கராக மாறினார்

By Javid Ahamed

கொழும்பு: டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் களத்தை விட்டு விரைவில் வெளியேறியதை முன்னாள் வீரர் அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் கிண்டல் செய்தார். 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களுக்குள்ளேயே சயீம் அயூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான்ஆகிய தொடக்க வீரர்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

இதனால், அணியை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு பாபர் அசாமிடம் இருந்தது.இருப்பினும், 31 வயதான பாபர், அழுத்தத்தின் கீழ் சோபிக்கத் தவறினார். ஐந்தாவது ஓவரில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலின் பந்தை தடுமாற்றமாக ஸ்வீப் செய்ய முயன்ற அவர், பந்தை தவறவிட, அது நேராக ஸ்டம்பைத் தாக்கியது.


ஏழு பந்துகளைச் சந்தித்த பாபர், ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், ரவி சாஸ்திரியின் பிரபலமான வார்த்தையை மேற்கோள் காட்டி, பாபர் அசாம் துப்பாக்கி தோட்டா போல் வேகமாக வெளியேறி விட்டார் என்று கிண்டல் அடித்துள்ளார். அவர் தனது பதிவில், "Gone like a tracer bullet" என்று எழுதியிருந்தார்.

IND vs PAK: 6-2 கால்பந்து ஸ்கோர் போல் மாறிய பாகிஸ்தான்.. தொடக்க வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய பும்ரா, ஹர்திக்

இதற்கு ரசிகர்கள் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்கும் போது வா மா மின்னல் என்று சொல்லும் போது, அந்தப் பெண் வேகமாக செல்வதை போல், பாபர் அசாம் சென்றுவிட்டதப ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர். மேலும் சிலர், பாலிவுட் திரைப்படமான துரந்தரில் இந்திய ஏஜெண்ட் ஒருவர் பாகிஸ்தானுக்கு சென்று அந்த நாட்டை அழிப்பது போல் பாபர் அசாம் செயல்படுவதாக ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்,

பாபரின் ஆட்டமிழப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி கடுமையான அழுத்தத்திற்கு உள்ளானது. பவர்பிளேயில் ஆறு ஓவர்கள் முடிவில் 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. பாபர் அசாம் சோபிக்கத் தவறிய பிறகு, உஸ்மான் கான் பாகிஸ்தான் அணிக்கு சிறிய நம்பிக்கையை அளித்தார். விக்கெட் கீப்பரான இவர், 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ரன் சேர்த்த வீரராக விளங்கினார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து அவருக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

IND vs PAK: வெற்றியை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார்

சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 61 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்தது.இந்தியாவுக்காக ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Credit: Mykhel

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 10:11 [IST]
English summary
In Colombo, India defeated Pakistan by 61 runs as Ishaan Kishan scored 77 off 40 and India’s bowlers dominated after early wickets. The win helps India advance to the Super 8, continuing a string of victories in the tournament. Ashwin’s social media moment and the team’s solid all-round performance featured prominently.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+