ஓட்டு எல்லாம் போய்விடும்.. விஜய் முன்பே தவெகவினருக்கு வார்னிங் கொடுத்த செங்கோட்டையன்.. விசில் ஊத கட்டுப்பாடு
சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் தவெகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் விஜய் முன்பே தவெக தொண்டர்களுக்கு வார்னிங் செய்தார். விசில் எங்கே அடிக்கவேண்டும் என்பதில் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். கடைசியாக அவர் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் முதலில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‛‛எதிர் கூட்டணிகளை தூள் தூளாக்கும் கட்சி தவெக. எந்த சக்தியாலும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது. நமக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கி கொண்டு இருப்போரின் காதில் விசில் அடித்து விட வேண்டாம். வயதானவர்கள் முன்பு விசில் அடித்தால் வாக்குகள் போய்விடும். வயதானவர்களிடம் விசில் அடிக்காதீர்கள். அவர்கள் தடுமாறி போவார்கள்'' என்று வார்னிங் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கியது.
முன்னதாக இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் விசில் கொண்டு வந்தனர். அதனை அவர்கள் ஊதி கொண்டே இருந்தனர். ஆலோசனை கூட்டம் நடக்கும் இடத்துக்கும் சென்றபோதும் அவர்கள் விடவில்லை. விஜயை விசில் அடித்து தான் வரவேற்றனர். நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் அவர்கள் தொடர்ந்து விசிலடித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் விசில் சத்தம் காதை கிழித்தது. இதனால் விஜய் தனது இரு காதுகளையும் மூடியபடி சிரித்தார்.
அதேபோல் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதில் இருந்தே தவெகவினர் விசிலுடன் நடமாடி வருகின்றனர். பல இடங்களில் சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விசில் வாங்கி வழங்கி வருகின்றனர். அதோடு சாலைகளில் விசிலடித்தபடி சின்னத்தை பிரபலமாக்கி வருகின்றனர். இந்நிலையில் தான் விசிலடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். அப்படி இடையூறு செய்தால் ஓட்டுகள் பறிபோக வாய்ப்புள்ளது என்று செங்கோட்டையன் வார்னிங் செய்துள்ளார்.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








