தனுஷுடனான உறவு முறை.. அனைத்தையும் ஓபனாக போட்டுடைத்த மிருணாள் தாகூர்

By Karunanithi Vikraman

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்திருந்த தனுஷ் சில காரணங்களால் அவரை பிரிந்துவிட்டார். அந்தப் பிரிவுக்கு அவர் சிங்கிளாகத்தான் இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரும், நடிகை மிருணாள் தாகூரும் சின்சியராக காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்தன. இந்நிலையில் மிருணாள் முதன்முறையாக மௌனம் கலைத்திருக்கிரார்.

தனுஷுக்கும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இரண்டு மகன்களை பெற்ற அவர்கள்; திடீரென சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அந்தப் பிரவுக்கு இரண்டு பேருமே காரணம்தான் என்று பலரால் சொல்லப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக அந்த பிரிவை கடந்து சென்றுவிட்டார்கள். தங்கள் மகன்களை கோ பேரண்ட்டிங் மூலம் வளர்த்துவருகிறார்கள்.

சிங்கிள் தனுஷ்: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா இன்னொரு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும்; அதற்காக தங்களது உறவினர் பெண் ஒருவரை பார்த்து வைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது பின்னர் உறுதியானது. அதேசமயம் நடிகை மிருணாள் தாகூரும், தனுஷும் டேட்டிங் செய்தார்கள். அப்போது ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டதால் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் குரல்கள் கேட்டன.


Mrunal Thakur Breaks Silence on Dating Rumours with Dhanush
Photo Credit:

மிருணாளின் செயல்: முக்கியமாக இன்ஸ்டாகிராமில் தனுஷின் சகோதரிகளை மிருணாளும், மிருணாளை தனுஷின் சகோதரிகளும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்துகொண்டனர். அதை வைத்து, மிருணாளுடனான உறவை தனுஷ் சொல்லி வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்றும் ரசிகர்கள் ஓபனாகவே சொல்லிவந்தனர். ஆனால் இதுகுறித்து இரண்டு பேருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

ட்ரெண்டான புகைப்படம்: அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு ஒரே அறையில் தனுஷும், மிருணாளும் இருந்த புகைப்படம் ஒன்று ட்ரெண்டானது. அதை பார்த்த பிறகும் இவர்கள் தொடர்பான காதல் கிசுகிசு மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து இந்த கிசுகிசு பரவிவருவதால்; இனிமேலும் விட்டால் சரியாக இருக்காது என மிருணாள் முடிவெடுத்ததாக தெரிகிறது. எனவே இதுகுறித்து முதன்முறையாக மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

மிருணாளின் விளக்கம்: இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னை பற்றியும் தனுஷை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அவை அடிப்படை ஆதாரம் இல்லாதவை. தனுஷ் எனக்கு எப்போதும் ஒரு சகோதரர் மட்டும்தான். எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான உறவு மட்டும்தான்" என்றார். இதன் மூலம் இத்தனை நாட்கள் கிளப்பப்பட்டு வந்த தனுஷ் - மிருணாள் தாகூர் காதல் வதந்திகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இது இப்போது முடிந்திருப்பதால் இனிமேல் இந்த மாதிரியான பேச்சுக்கள் எதுவும் கிளம்பாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Credit: Filmibeat

More from DriveSpark

Article Published On: Tuesday, February 3, 2026, 12:19 [IST]
English summary
Mrunal Thakur has finally responded to the rumours linking her with actor Dhanush. The actress clarified that the dating and marriage speculations are fake and baseless, calling Dhanush her brother and confirming they share only a professional relationship.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+