புது ரூல்ஸ்.. மார்ச்.1 முதல் அமல்.. சிம் கார்டு முதல் ரயில் டிக்கெட் வரை.. என்னென்ன மாறுது.. இதோ முழு விவரம்..

By Prakash S

வரும் மார்ச் மாதம் பல்வேறு புதிய மாற்றங்கள் வருகின்றன. அதாவது ரயில் டிக்கெட் முதல் சிம் கார்டு வரை பல புதிய விதிகள் (New Rules) நடைமுறைக்கு வர உள்ளன. இந்த புதிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிய சிம் கார்டு விதிமுறை: வரும் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய சிம் (Sim) கார்டு விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது உங்கள் போனில் இருந்து சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ்அப், சிக்னல், ஸ்னாப்சாட் போன்ற முக்கிய செயலிகள் வேலை செய்வதை நிறுத்திவிடும். குறிப்பாக டிஜிட்டல் மோசடியைத் தடுக்க தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயலியில் உள்ள சிம் இல்லாமல் ஆப்களை பயன்படுத்துவது இனி நடக்காது.


new-rules-take-effect-from-march-1

சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 1-ம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர்கள் விலைகளை மதிப்பாய்வு செய்யும். சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து சிலிண்டர் விலைகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என்று கூறப்படுகிறது.

யுபிஐ: டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பானதாக மாற உள்ளன. அதாவது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு சரிபார்ப்பை செயல்படுத்தியுள்ளன. குறிப்பாக நீங்கள் பெரிய தொகைகளை மாற்றினால் இப்போது உங்களுக்கு பயோமெட்ரிக்ஸ் அல்லது அங்கீகாரம் தேவைப்படும்.

வாடகை வீடு புதிய விதிகள்: 2025-2026-ம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகளின்படி, மார்ச் 1-ம் தேதி முதல் புதிய ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் வருகின்றன. அதாவது வாடகை ஒப்பந்தங்களின் டிஜிட்டல் பதிவு இப்போது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வைப்புத்தொகை ஆனது அதிகபட்சம் இரண்டு மாத வாடகைக்கு மட்டுமே இருக்கும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் 24 மணிநேரத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் டிக்கெட்: பொதுவாக யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த செயலி இருந்தால் ரயில் நிலையங்களில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் யுடிஎஸ் செயலி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே புதிதாக கொண்டுவரப்பட்ட ரயில்ஒன் செயலி மூலம் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ரயில்ஒன் (RailOne) செயலி மூலம் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை பெற முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பான வசதிகள் ரயில்ஒன் செயலியில் உள்ளன.


new-rules-take-effect-from-march-1

அதாவது ரயில்ஒன் செயலியில் ரயில்கள் தேடல், பிஎன்ஆர் நிலை, ரயிலை டிராக் செய்தல், உணவு ஆர்டர், டிக்கெட் ரீபண்ட் பெறுதல் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ரயலிவே புகார்களை அளிக்கும் ரயில் மதாத் சேவையும் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலியைப் பயன்படுத்த அவசியம் இருக்காது.

ரயில்ஒன் செயலி பதிவிறக்கம் செய்து யுடிஎஸ் செயலியின் பயனாளர் குறியீடுகளை பயன்படுத்தியே கணக்கை துவங்கலாம். ஏற்கனவே சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில்ஒன் செயலிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

Credit: Gizbot

More from DriveSpark

Article Published On: Sunday, March 1, 2026, 11:06 [IST]
English summary
New Rules Take Effect from March 1: Key Changes to SIM Cards, Train Tickets, and More
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+