திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்.. MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்!

By Vignesh Selvaraj

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களாக இருவரும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.


OPS Faction Leaders Vaithilingam Vellamandi Natarajan Kunnam Ramachandran Set to Join DMK Today

அதேசமயம், அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவதா? திமுக அணியில் இடம்பெறுவதா? தவெக கூட்டணியில் இடம்பெறுவதா? தனிக் கட்சி தொடங்குவதா? என்பதில் ஓபிஎஸ் அணி குழப்பத்தில் இருந்து வருகிறது.

இதனால் ஓபிஎஸ் அணியில் அதிருப்தி அடைந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர், அவர் தமது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்.எல்.ஏ பழனி சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் அண்மையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏகுன்னம் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001-2006 வரை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதேபோல, 2011-2016 வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த வைத்திலிங்கம், ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2021ல் மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.

ஓ. பன்னீர்செல்வம் அணியில் முக்கிய தளபதியாக இருந்தவர் வைத்திலிங்கம். அதிமுகவில் தலைமை பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, ஓ. பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர், அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.


vaithilingam o panneerselvam dmk

அதன்பிறகு, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் இயங்கி வரும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, வைத்திலிங்கமும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பாக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் வைத்திலிங்கம்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்காக அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார் முன்னாள் எம்எல்ஏ வைத்திலிங்கம். வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். வைத்திலிங்கத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று அழைத்துச் சென்றார். அதனைத்தொடர்ந்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் வைத்திலிங்கம்.

மேலும், குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான ராமச்சந்திரனும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணியின் பெரம்பலூர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளராகவும், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில பொறுப்பாளராகவும் இருப்பவர் குன்னம் ராமச்சந்திரன்.

Credit: Oneindia

More from DriveSpark

Article Published On: Wednesday, January 21, 2026, 7:19 [IST]
English summary
Reports are circulating that former AIADMK ministers Vaithilingam and Vellamandi Natarajan, both belonging to the OPS faction, are set to join the DMK today. ​​It has also been reported that Kunnam Ramachandran, the former AIADMK MLA, will also be joining the DMK.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+