SA vs NZ: “நியூசிலாந்திடம் கவனமா இருங்க இல்லைனா..” தென்னாப்பிரிக்காவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை

By Aravinthan

கொல்கத்தா: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்த போட்டியில், நியூசிலாந்து அணியை சாதாரணமாக எடைபோடக் கூடாது என தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவனக்குறைவு ஆபத்தானது

தென்னாப்பிரிக்க அணி இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியிலும் நியூசிலாந்து அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து போன்ற ஒரு அணிக்கு எதிராக விளையாடும்போது போட்டியின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.


SA vs NZ Semifinal Ravi Shastri Warns South Africa Not to Underestimate New Zealand in T20 World Cup 2026 Semi finals

ஐசிசி ஊடகத்திடம் பேசிய அவர், "நாம் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நியூசிலாந்துக்கு எதிராகக் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் அது ஆபத்தாக முடிந்துவிடும். நீங்கள் சற்று நிதானமாகச் செயல்பட நினைக்கும் அந்த நேரத்தில், அவர்கள் அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி உடனடியாகப் போட்டிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள்," என்று தெரிவித்தார்.

வியூகங்களில் நியூசிலாந்து கெட்டிக்காரர்கள்

இந்த உலகக்கோப்பை தொடரில் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சில சறுக்கல்களைச் சந்தித்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் திட்டமிடல் குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, நியூசிலாந்து வீரர்கள் களத்தில் எதிரணிக்குச் சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

"நியூசிலாந்து அணியின் போட்டித் தயாரிப்புகள் மிகவும் நுணுக்கமானவை. எதிரணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றியும் அவர்கள் முழுமையாக ஆய்வு செய்திருப்பார்கள். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்த வேண்டும், எப்போது பந்துவீச வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். மைதானத்தில் அவர்கள் தங்கள் முழு உழைப்பையும் வெளிப்படுத்துவார்கள்," என்று அவர் நியூசிலாந்து அணியைப் பாராட்டினார்.

SA vs NZ: “லா ஆஃப் ஆவரேஜ்” சிக்கலில் தென்னாப்பிரிக்கா?.. நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பா?

புள்ளிவிவரங்களில் யாருக்குச் சாதகம்?

டி20 கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிராகத் தென்னாப்பிரிக்க அணியே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள பத்தொன்பது டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பன்னிரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.

IND vs ENG: “நல்ல விஷயம் எதுவும் பண்ணக் கூடாது..” பயிற்சி செய்யாமல் இந்திய வீரர்கள் செய்த செயல்

குறிப்பாக, டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணிதான் வெற்றி வாகை சூடியுள்ளது. புள்ளிவிவரங்கள் மற்றும் நடப்புத் தொடரின் செயல்பாடுகள் தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்தாலும், நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் செயல்பாடுகள் எப்போதும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Credit: Mykhel

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 9:35 [IST]
English summary
SA vs NZ: Ravi Shastri cautions South Africa ahead of the T20 World Cup semifinal at Eden Gardens, highlighting New Zealand's tactical brilliance and ability to dominate ICC knockouts.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+