சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

By Saran Raj

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். அதேசமயம் நவகிரகங்களிலேயே மிகவும் நகரும் கிரகமும் சனிபகவான்தான். சனிபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனியின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜோதிட கணிப்புகளின் படி, சனிபகவான் ஏப்ரல் 2026-ல் மீன ராசியில் உச்சம் பெறுவார். சனிபகவானின் இந்த உதயம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


Saturn Rise in Pisces on April 2026 List of Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் உதயம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது, ஏனெனில் அது அவர்களின் கர்மா மற்றும் தொழிலின் பத்தாவது வீட்டில் நிகழ்கிறது. இந்த சாதகமான கிரக மாற்றத்தால் வேலையில்லாத நபர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம், அதே நேரத்தில் வேலையில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகள் அல்லது அங்கீகாரத்தைப் பெறலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் சவாலான பணிகள் இந்த காலகட்டத்தில் சரியாக முடிக்கப்படும். இது அவர்களுக்கு வெற்றிகரமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரப்போகிறது.

வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம், ஏனெனில் இந்த காலம் அறிவுசார் நோக்கங்களையும் சர்வதேச பயண வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த காலகட்டத்தில் பொதுவாக மாணவர்கள் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனையை எதிர்பார்க்கலாம், இது கல்வி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும்.


Saturn Rise in Pisces on April 2026 List of Lucky Zodiac Signs

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் நான்காவது வீட்டில் உதயமாகப் போகிறார்கள். இந்த கட்டம் ஆறுதல், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தரும். ஆடம்பரப் பொருட்கள், வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.

திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு, மூன்றாம் வீட்டில் சனியின் உதயம் நடக்கப் போகிறது. இது அவர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த பெயர்ச்சி அவர்களின் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மனஉறுதியை அதிகரிக்கும். சனிபகவானின் உதயத்தால் அவர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் இருக்கும். அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து புதிய வருமானங்களை எதிர்பார்க்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.

Credit: Boldsky

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 12:21 [IST]
English summary
Saturn rise in pisces on april 2026 list of lucky zodiac signs
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+