30 ஆண்டுகள் கழித்து உருவாகும் சனி-சூரிய சேர்க்கை: மார்ச் மாதம் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Sun Conjunction 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து கூடுதல் தாக்கத்தை மனித வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. அதில் சில கிரகங்களின் சேர்க்கைகள் சுப பலன்களையும், இன்னும் சில கிரகங்களின் சேர்க்கைகள் அசுப பலன்களையும் தரும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே நீதிமானும், சூரியனின் மகனுமாக கருதப்படும் சனி பகவான் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் மாத சூரிய பெயர்ச்சியால் மீன ராசியில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கையானது மார்ச் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. முக்கியமாக இந்த சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். முக்கியமாக நிதி ரீதியாக மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 30 ஆண்டுகள் கழித்து உருவாகும் சனி சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல மரியாதையும், கௌரவத்தையும் பெறுவார்கள். சில புதிய பொறுப்புக்களையும் பெறக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வியாபாரிகள் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இருந்தாலும், இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும், கோபப்படுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம்.
வெளிநாட்டில் பணிபுரியும் கனவு நனவாகலாம். மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். கடன் தொல்லை நீங்கும். இருந்தாலும் வேலையில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எதை செய்வதற்கு முன்பும் ஒன்றிற்கு இருமுறை சிந்தித்து செய்லபட அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பள்ளது. குடும்ப சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Credit: Boldsky


Click it and Unblock the Notifications








