குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொழில், செல்வத்தில் இரட்டிப்பு வளர்ச்சி ஏற்படும்..
Sun Jupiter Make Navpancham Rajyog 2026: வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சூரியன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
வேத நாட்காட்டியின் படி, மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஹோலி பண்டிகை வருகிறது. இந்த ஹோலி பண்டிகைக்கு பின் மிகவும் சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ராஜயோகமானது சூரியன் மற்றும் குரு பகவானின் நிலையால் உருவாகப் போகிறது. இந்த யோகத்தின் போது சூரியனும், குருவும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இப்படிப்பட்ட யோகம் மார்ச் 05 ஆம் தேதி உருவாகவுள்ளது.

இந்த யோகத்தால் தொழில், செல்வம், மரியாதை போன்றவை உயரும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தாலும் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். முக்கியமாக சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.

சிம்மம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் மேம்படும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்போரின் நட்பு கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு முடிவுக்காக காத்திருந்தால், இந்த யோக காலத்தில் அது தெரியும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்ங்கள் கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Credit: Boldsky


Click it and Unblock the Notifications








