வார ராசிபலன் (22 February 2026-28 February 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..

By Maha Lakshmi S

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


Weekly Horoscope For 22 February 2026 To 28 February 2026 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாரத்தின் நடுப்பகுதியில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். வாரத்தின் நடுப்பகுதியில் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்க நேரிடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். மன அழுத்தம் குறையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வார இறுதியில் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்களின் வேலைகள் படிப்படியாக மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வார இறுதியில் வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் சிறிது சரிவு ஏற்படலாம். வார இறுதியில் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புககளும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். மன அமைதி அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் முடிவுகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். வார இறுதியில் வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றம் வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகள் அதிகம் ஏற்படும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் தைரியம் நிறைந்து இருப்பீர்கள். வாரத்தின் நடுவில் எந்த வேலையையும் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்யும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்த பின்னரே எடுக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Credit: Boldsky

More from DriveSpark

Article Published On: Sunday, February 22, 2026, 12:20 [IST]
English summary
Weekly Horoscope: Check out the weekly horoscope for 18 February 2026 To 24 February 2026 in tamil for all zodiac signs. Read on...
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+