கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் ஆன நடிகையா இது! பைக்ல வந்த ஆண் நண்பருக்கு எதை குடுத்து அனுப்பறாங்க பாருங்க!
இந்தியாவில் முன்பெல்லாம் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால் சமீப காலமாக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விவாகரத்து பெறுவது அதிகமாக இருக்கிறது. வெகு சமீபத்தில் கூட, கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹாலும் (Yuzvendra Chahal), அவருடைய மனைவி தனஸ்ரீ வர்மாவும் (Dhanashree Verma) விவாகரத்து பெற்றனர். மிக குறுகிய காலத்திலேயே இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.
இவர்களுக்கும், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் அவரது முன்னாள் மனைவியான நடாஷா ஸ்டான்கோவிக் (Natasa Stankovic) ஆகியோருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. யுசுவேந்திர சஹால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் (Cricket Players).

மறுபக்கம் தனஸ்ரீ வர்மா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவருமே பிரபலமான டான்ஸர் (Dancer) மற்றும் நடிகைகள் (Actresses) ஆவர். யுசுவேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மாவை போல், ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோரின் திருமண வாழ்க்கையும் விரைவாகவே முடிவிற்கு வந்து விட்டது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில், ஹர்திக் பாண்டியாவை கிரிக்கெட் களத்தில் நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். மறுபக்கம் நடாஷா ஸ்டான்கோவிக்கை மும்பையில் (Mumbai) உள்ள ஜிம்மில் (Gym) அடிக்கடி காண முடிகிறது.

இந்த வரிசையில் ஜிம்மில் இருந்து நடாஷா ஸ்டான்கோவிக் வெளியே வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஜிம்மில் இருந்து வெளியே வந்த நடாஷா ஸ்டான்கோவிக், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 Series GT) காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த காரை நடாஷா ஸ்டான்கோவிக் அடிக்கடி பயன்படுத்தி வருவது குறித்தும், அந்த காரின் விலை மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் குறித்தும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். அப்படியானால் இந்த செய்தியில் என்ன சுவாரஸ்யம்? என நீங்கள் கேட்பது புரிகிறது.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், நடாஷா ஸ்டான்கோவிக் காரில் ஏறுவதற்கு முன்பு, அங்கு பைக்கில் அமர்ந்திருந்த ஒருவருக்கு, சாக்லேட் (Chocolate) வழங்குவதை நாம் காணலாம். சாக்லேட் வாங்கிய நபர், நடாஷா ஸ்டான்கோவிக்கின் நெருங்கிய நண்பரான அலெக்ஸ் (Alex) என கூறப்படுகிறது. அவர் சாக்லேட்டை வாங்கும்போது, கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) பைக்கில் அமர்ந்திருந்தார்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில்தான் இந்த பைக் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது புத்தம் புதியது ஆகும். இது அலெக்ஸின் சொந்த பைக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரது பெயரில்தான் இந்த பைக் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது செயல்திறன் மிக்க பைக் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2.15 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கேடிஎம் ஆர்சி 200 பைக் கிடைக்கிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 2.21 லட்ச ரூபாய் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கேடிஎம் ஆர்சி 200 பைக்கில், அதிகபட்சமாக 25 பிஎஸ் பவர் மற்றும் 19.2 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 199.5 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 (Bajaj Pulsar NS 200) மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 (Bajaj Pulsar RS 200) ஆகிய பைக்குகள் உடன், கேடிஎம் ஆர்சி 200 போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடாஷா ஸ்டான்கோவிக்கின் நெருங்கிய நண்பரான அலெக்ஸை கேடிஎம் ஆர்சி 200 பைக்குடன் பார்ப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் அவர் இதே பைக்கில் பயணம் செய்வதை அடிக்கடி பார்க்க முடிந்துள்ளது. அவர் ஜிம்மிற்கு வந்து செல்ல இந்த பைக்கை பயன்படுத்தி கொண்டிருப்பதை போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








