சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

By Balasubramanian

நடிகர் அஜித்குமார் ஆலோசனைப்படி சென்னை எம்ஐடி கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து பறந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்கான இந்த விமானத்தை அஜித் தலைமையிலான மாணவ குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த ட்ரோனை ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

தமிழ் சினிமா நடிகர் அஜித் குறித்து நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் சினிமா துறையில் மட்டுமல்ல கார், பைக் ரேஸிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்தவர். இந்தியாவில் ஒரு சிலரே கலந்து கொண்ட எப்-1 ரேஸில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கலந்து கொண்டு உலகளவில் 6ம் இடத்தை பிடித்தார்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

சமீபத்தில் இவருக்க பறக்கும் விமானங்கள் மீது விரும்பம் திரும்பி சிறிய ரக ஆள்லில்லா விமானங்களை தானே தயாரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் தயாரித்த விமானங்கள் சில தமிழ் சினிமாக்களில் கூட பயன்படுத்தப்பட்டது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட எம்ஐடி கல்லூரி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யூஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் கலந்து கொண்டனர். அப்போட்டியில் ஆம்புலன்ஸ் போல அவசர நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய வாகனத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பதே இந்த போட்டி.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இப்போட்டியில் அண்ணா பல்கலை மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். உலகளவில் 55 நாடுகளில் உள்ள மாணவர்கள் மட்டுமே இதில் தேர்ச்சி பெற்றனர் அதில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இந்நிலையில் அதன் இறுதி போட்டி ஆஸ்திரேலியாவில் உள் குயின்ஸ்லாண்டில் நடந்தது. இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என கருதப்பட்டது. வித்தியாசமான சிந்தனை, நுட்பமான அறிவு கொண்டவர்களால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இந்நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் சென்னை எம்ஐடி மாணவர்களுக்கு சிறப்பான ஆலேசகரை நியமிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. மாணவர்கள் மெடிக்கல் உதவி செய்யும் சிறிய ரக விமானத்தை தயாரிக்க முடிவு செய்ததால் அதை சிறப்பாக செய்து முடிக்க நடிகர் அஜித்தை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

நடிகர் அஜித் ஒப்பு கொண்டதையடுத்து அவர் மாணவர்களை வழிநடத்த துவங்கினார். அவர் அந்த மாணவ குழுவிற்கு டீம் தக்ஷா என பெயர் சூட்டினார். ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள போட்டிக்காக நடிகர் அஜித் தலைமையில் மாணவர்கள் பறக்கும் விமானத்தை தயார் செய்ய துவங்கினர்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

போட்டியில் மெடிக்கல் சம்ந்தமான அந்த விமானம் செயல்பட வேண்டும் என்பதால் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் ஆள்இல்லாமல் பறக்கும் விமானத்தை அவர்கள் தயார் செய்ய வேண்டும். இதுவரை உலகில் இவர்களின் ஏற்ற கட்டுபாடுகளுடன் ஆளில்லா விமானங்கள் இல்லை.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

ஆனால் நடிகர் அஜித் தலைமையிலான குழு இதை வடிவமைக்க தயார் ஆனாது. அவர் தற்போது சுமார் 10 கிலோ மீட்டர் வரை கட்டுப்பாட்டாளரின் தொடர்பிலேயே பறக்கும் மற்றும் 6 மணி நேரம் 7 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் விமானத்தை அவர்கள் வடிவமைத்து முடித்துள்ளனர்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இதுவரை உலகில் இவ்வளவு நீண்ட நேரம் ஒரே பேட்டரியில் இயங்கும் விமானங்கள் இல்லை. இதனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பு தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த விமானம் பிற்காலத்தில் ராணுவத்தின் பயன்பாட்டிற்கும் வரலாம் என கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

தற்போது அந்த குழு இந்த விமானத்தில் எப்படி மருத்துவ உதவி செய்யும் பொருட்களை உட்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் இறக்கியுள்ளது. இந்த முயற்சி வெற்றி கரமான நடக்கும் பட்சத்தில் இந்த குழுவின் ஆராய்ச்சி தான் வெற்றி பெறும் என போட்டியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

தற்போது நடிகர் அஜித் மாணவர்களுக்கு அளித்து வரும் ஆலோசனைக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர் மாணவர்கள்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், ரூ 1000 வித சம்பளமாக தர முன்வந்தது. அதை வாங்க மறுத்த நடிகர் அஜித் அந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்கு அந்த பணத்தை படிப்பிற்கான உதவி தொகையாக வழங்க கோரியுள்ளார்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் இறுதி போட்டி நடக்கிறது. நமது சென்னை மாணவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற்றால் அது நமக்கு மட்டும் அல்லது ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே பெருமை தேடி தரும் ஒரு விஷயமா அமையும். அந்த வகையில் அவர்கள் வெற்றி பெற கமெண்டில் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. காரில் இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா?
  2. ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி!
  3. புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!
  4. உலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
  5. சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
ajith has pilot license, drone made another record among engineering college in India. It became world highest flying hours 6 hours and 7 minutes. Read in Tamil
Story first published: Friday, July 13, 2018, 18:26 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more